சினிமா

பாடல் சிடியை வெளியிட்ட எடப்பாடி: படம் வெளியாகும் நாளில் டி.வி.டி. விற்க ஏற்பாடு

Published On 2017-05-24 08:54 GMT   |   Update On 2017-05-24 08:55 GMT
அம்மாவின் பாசத்தை எடுத்து சொல்லும் ‘வைரமகன்’ படத்தின் பாடல் சிடியை எடப்பாடி வெளியிட்டார். படம் வெளியாகும் நாளில் டி.வி.டி. விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சமுதாய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்து நடித்தவர் கோபி காந்தி. இவர் ‘முதல் மாணவன்’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தற்போது ‘வீரக்கலை’, வைரமகன்’ என இரண்டு படங்களை தயாரித்து நடித்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக இந்த படங்கள் வெளியாகும் அன்றே அவற்றின் டி.வி.டி. வெளியிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.



இந்த ‘வைரமகன்’ படம் அம்மாவின் பாசத்தை எடுத்து சொல்லும் படமாக அமைந்துள்ளது. இதில் கோபி காந்தி விவசாயத் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த படத்தில் விவசாயிகளின் பெருமையை சொல்லும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பாடல்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் ‘வைரமகன்’ திரைப்பட இயக்குனர் முருகவேல், இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News