சினிமா

என்னைப்போல் வருத்தப்படாதீர்கள் இருக்கும் போதே தாயை கவனியுங்கள்: கவிஞர் சினேகன்

Published On 2017-05-19 09:25 GMT   |   Update On 2017-05-19 09:25 GMT
என்னைப்போல் வருத்தப்படாதீர்கள், இருக்கும் போதே தாயை கவனியுங்கள் என்று கவிஞர் சினேகன் வலியுறுத்தி உள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு ‘ஐ லவ் யூ அம்மா’ என்கிற குறும்படத்தின் திரையீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதை எஸ்.கே.எஸ்.கார்த்திக் இயக்கியுள்ளார். எஸ்.விஜயமுருகன் தயாரித்துள்ளார். தாய்ப் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படம் உருவாகியுள்ளது.

இதுபற்றி கூறிய கவிஞர் சினேகன், “இந்த நேரத்தில் என் அம்மா பற்றிய நினைவு எழுகிறது. அருகில் இருப்பதால் நம் அம்மா தானே பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கிறோம். இழந்த பிறகு வருத்தப்படுகிறோம். எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். அம்மாவை இருக்கும் போதே கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு என்னைப் போல வருத்தப்பட வேண்டியது வரும்.



எங்கள் குடும்பம் பெரியது எங்கள் அம்மாவுக்கு எட்டு பிள்ளைகள். நான் சென்னை வர அனுமதி கொடுத்தது எங்கம்மா தான். நீ உனக்குப் பிடிச்ச வழியில் போ கண்ணு என்று வாழ்த்தினார்.

அப்படிப்பட்ட அம்மா நான் எழுதிய என் ஒரு பாட்டையும் கேட்கவில்லை. 2000-ல் இறந்தார். அதை வைத்து தான் ‘ராம்’ படத்தில் ‘சூரியன் உடைஞ்சிடுச்சு பகலுக்கு என்ன செய்ய?’ என்று பிறகு எழுதினேன்.

இதுவரை 42 நாடுகள் போய் விட்டேன். 3000 பாடல்கள் எழுதிவிட்டேன். 174 நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள் அம்மா பார்க்காத என் சந்தோ‌ஷம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.” என்றார்.
Tags:    

Similar News