இது புதுசு

கியா EV9 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2023-07-06 07:36 GMT   |   Update On 2023-07-06 07:36 GMT
  • இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் EV9 ஆகும்.
  • புதிய கியா EV9 மாடல் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

கியா நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி - கியா EV9 மாடலை கடந்த மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த காரின் கான்செப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த வரிசையில், புதிய கியா EV9 மாடலின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கியா இந்தியா நிறுவனம் கியா 2.0 பெயரில் புதிய யுத்தியை அறிவித்து இருக்கிறது. அதன்படி அடுத்த சில ஆண்டுகளுக்குள், இந்திய சந்தையில் பத்து சதவீதம் பங்குகளை பிடிக்க கியா இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் EV9 உள்பட பல்வேறு மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய கியா இந்தியா முடிவு செய்திருக்கிறது. இத்துடன் நாடு முழுக்க கியா டச்பாயின்ட்களின் எண்ணிக்கையை 600-ஆக அதிகரிக்க இருப்பதாக கியா இந்தியா தெரிவித்துள்ளது.

கியா EV9 மாடலின் இந்திய விற்பனை அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. இது கியா EV6 மாடலை தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் கியா நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் EV9 மாடல் கியா நிறுவனத்தின் விலை உயர்ந்த மற்றும் மிகப்பெரிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஆகும்.

புதிய கியா EV9 மாடல் அப்ரைட் எஸ்யுவி ஆகும். வேரியண்டிற்கு ஏற்ப, இந்த காரில் மூன்றடுக்கு கேபின் வழங்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களுக்கு கியா EV9 பதிலடி கொடுக்கும் என்று தெரிகிறது.

கியா EV9 மாடல் 76.1 கிலோவாட் ஹவர் பேட்டரி, 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி என இரண்டு வித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. 

Tags:    

Similar News