இது புதுசு

ரூ. 54 லட்சம் துவக்க விலையில் ஆடி Q3 சீரிஸ் புது மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2024-05-10 09:58 GMT   |   Update On 2024-05-10 09:58 GMT
  • புதிய ஆடி கார்களில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இரு மாடல்களிலும் R18 அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய Q3 போல்ட் எடிஷன் மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போல்ட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரு எஸ்.யு.வி. மாடல்களின் விலை முறையே ரூ. 54 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் ரூ. 55 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனித்துவ டிசைன் மூலம் இரண்டு புதிய வேரியண்ட்கள் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களாக ஆடி Q3 மற்றும் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் உள்ளன. அந்த வகையில், இவற்றின் புதிய வேரியண்ட்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

 


இரண்டு புதிய ஆடி கார்களிலும் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் வசதி உள்ளது. இதில் உள்ள என்ஜின் 188 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

இவைதவிர ஆடி Q3 போல்ட் மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போல்ட் எடிஷன் என இரு மாடல்களிலும் R18 அலாய் வீல்கள், ஸ்போர்ட்பேக் மாடலில் பிரத்யேக S-லைன் பேக்கேஜ், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பானரோமிக் கிளாஸ் சன்ரூஃப், பவர் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், லெதர் ஸ்டிராப் கொண்ட ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இவற்றுடன் இரு கார்களிலும் ஆம்பியன்ட் லைட் பேக்கேஜ், கிளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் ஏய்ட் மற்றும் ரியர் வியூ கேமரா, ஆடி ஸ்மார்ட்போன் இன்டர்ஃபேஸ், MMI நேவிகேஷன் பிளஸ் மற்றும் MMI டச் போன்ற வசதிகள் உள்ளன.

Tags:    

Similar News