ஆட்டோமொபைல்
ஒகினவா ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஒகினவா நிறுவனத்தின் ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

Published On 2019-09-06 08:59 GMT   |   Update On 2019-09-06 08:59 GMT
இந்தியாவில் ஒகினவா நிறுவனத்தின் புதிய ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒகினவா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், பிரெய்ஸ் புரோ எனும் புதிய மாடலை களமிறக்கி உள்ளது.

ஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்ட சிறப்பம்சங்கள் இதில் அடங்கும். இந்த புரோ மாடலில், லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி எளிதாக சார்ஜ் ஏற்ற முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டரை ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 110 கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது 90 கிமீ வரையிலும் பயணிக்க முடியும்.



இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1kW பிஎல்டிசி வாட்டர்புரூப் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 2kW லித்தியம் அயான் பேட்டரியிலிருந்து மின் மோட்டாருக்கான மின் திறன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 2,500 வாட்ஸ் திறனை வெளிப்படுத்தும்.

15 டிகிரி சரிவான சாலையிலும் எளிதாக செல்லும் திறன் படைத்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப் அலாரம், கீ லெஸ் இக்னிஷன், பார்க்கிங் லாட்டில் ஸ்கூட்டரை எளிதாக கண்டறியும் நுட்பம், மொபைல் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன. புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.71,990 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News