ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

பங்குனி மாத ராசிபலன்

Published On 2024-03-13 04:46 GMT   |   Update On 2024-03-13 04:48 GMT

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் ரிஷப ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சனியும் சஞ்சரிப்பதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது இருப்பதால், மறைமுக எதிர்ப்புகள், உறவினர் பகையை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிலும் கொஞ்சம் கவனத்தோடு செயல்படுங்கள்.

செவ்வாய் - சனி சேர்க்கை

மாதத்தின் முதல் நாளிலேயே, கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்குள்ள சனியோடு சேர்ந்து இந்த மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். முரண்பாடான இந்த கிரகச் சேர்க்கையின் காரணமாக, எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படப் போகிறது. உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால், விரயங்கள் அதிகரிக்கத் தான் செய்யும். வீண் விரயங்களும் உண்டாகும். யாருக்கேனும் பொறுப்பேற்று பணம் வாங்கிக் கொடுத்திருந்தால், அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையும் மாதம் இது.

மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அது பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கும். கும்பத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரனும் சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு இலாகா மாற்றம் ஏற்படக்கூடும். மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினை அகல, அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. அங்காரக வழிபாடு அவசியம் தேவை.

புதன் வக்ரம்

பங்குனி 13-ந் தேதி மீனத்தில் இருக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். ஏற்கனவே அவர் அங்கு நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் நிலையில், இப்பொழுது வக்ரமாகி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் புதன். எனவே பொருளாதாரத்தில் சிக்கல்கள் வரலாம். கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால், பிள்ளைகள் வழியிலும் பிரச்சினைகள் வந்துசேரலாம். பிள்ளைகளால் விரயங்களும், மன அமைதிக் குறைவும் ஏற்படும் காலகட்டம் இது. நல்ல வரன்கள் வீடு தேடி வந்தும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாத நிலை உருவாகும். அதனால் மன வருத்தம் அடைவீர்கள்.

மீனம் - சுக்ரன்

பங்குனி 19-ந் தேதி, தனது உச்ச வீடான மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் அங்குள்ள புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் பலம்பெறும் இந்த நேரம், ஒரு பொன்னான நேரமாகும். புதிய திருப்பங்கள் பலவும் உருவாகும். கடமையை செவ்வனே செய்து அனைவரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட் களையும் வாங்கி மகிழும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இதுவரை எதிர்பார்த்த பதவி உயர்வு, இப்பொழுது தடைகளை மீறித் தானாக வரும்.

பணி ஓய்வு பெற்றவர் களுக்கு மீண்டும் பணியில் நீடிப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மாதக் கடைசியில் நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு ஊதிய உயர்வும், பணி நீடிப்பும் கிடைக்கும். கலைஞர் களுக்கு, சகக் கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பணத் தட்டுப்பாடு அகலும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 17, 18, 22, 23, ஏப்ரல்: 4, 5, 8, 9, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

Similar News