சிம்மம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-18 03:35 GMT   |   Update On 2023-12-18 03:36 GMT

18.12.2023 முதல் 24.12.2023 வரை

நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குருவின் பார்வையில் சேர்க்கை. இந்த கிரக அமைப்பு புத ஆதித்ய யோகம். உங்களின் பல வருட எதிர்பார்ப்புகள் இந்த வாரத்தில் நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் வந்து சேரும்.

வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சிகள் வெற்றி தரும். பெண்கள் பிறந்த வீட்டின் பெருமையையும், புகுந்த வீட்டின் கவுரவத்தையும் காப்பார்கள்.உடல் ஆரோக்கிய மடையும். வீண் செலவுகள் கட்டுப்படும். கடன் பட்டு சொத்து வாங்குவீர்கள்.கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். திருமண விஷயங்கள் சித்திக்கும். 21.12.2023 இரவு 10.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஏகாதசி அன்று பச்சைக்கற்பூரம் அபிசேகம் செய்து மகா விஷ்ணுவை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News