என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
சுமாரான வாரம்.ராசி அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. ராசியில் சனி பார்வை பதிவது சில நாட்களுக்கு மட்டுமே என்று ஆறுதல் அடைந்தால் அஷ்டமச் சனி துவங்குவது மன பயத்தை ஏற்படுத்தலாம். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் முக்கியமான பணிகளை விரைந்து முடிப்பது சிறப்பு. குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. அரசு பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. சொத்து இல்லாத வர்களுக்கு புதியவீடு, வாகன யோகம் உண்டாகும்.
சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபரம் தொடர்பான சிறு அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து செயல்பட வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். சகோதர உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் திருக்கோளறு பதிகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
சுமாரான வாரம். கண்டகச் சனி விலகி அஷ்டமச் சனி துவங்கப் போகிறது. ராசி அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் வேலைப்பளு மிகுதியாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மறைமுக எதிரிகள் உருவாகலாம். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தை தவிர்க்கவும். சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும்.உயர் கல்வி முயற்சி வெற்றி தரும்.
விண்ணப்பித்த வீடு, வாகன கடன் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவையற்ற பேச்சையும், வாக்கு கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்மாமாவால் வீண் செலவு அல்லது கடன் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். இளம் பெண்க ளுக்கு கருவுறுதல் நடைபெறும் வாய்ப்புள்ளது. மாசி மகத்தன்று ஆதித்ய ஹிருதயம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். தொழிலில் நினைப்பதொன்று, நடப்ப தொன்றுமாக இருந்த நிலை மாறும். ஏழாம் அதிபதி சனியுடன் சூரியன் இணைவதால் கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்.
சிலருக்கு பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடப் பெயர்ச்சி செய்ய நேரும்.
அஷ்டமச் சனி துவங்குவதை நினைத்து கவலைப் படாமல் உங்கள் கடமையில் கவனமாக இருந்தால் நவ கிரகங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப் பயணம் செல்வார்கள்.
3.3.2025 அன்று மாலை 6.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சனைகளும் அடிப்பட்டு போகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆன்மபலம் உயரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
விருப்பங்கள் நிறைவேறி முயற்சிகள் மேலோங்கும் வாரம். தன லாப அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். மாத கிரகங்களின் சஞ்சாரம் ஓரளவு சாதகமான நிலையில் உள்ளது. வருட கிரகங்களின் சஞ்சாரம் சுமாராக உள்ளதால் முக்கிய பணிகளை விரைவாக, வேகமாக முடிக்கவும்.
உங்கள் முயற்சி புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். நம்மை உதவி செய்து கை தூக்கி விட யாருமில்லை என்ற எண்ணம் மிகைப்படுத்தலாக இருக்கும்.
சிலர் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை விட்டு விலகி வேறு இடத்தில் வாழும் சூழ்நிலை உண்டாகும். வழக்குகளை வாபஸ் பெற்று மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி தீர்ப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் கூடிவரும்.
வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரும். பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் , நகை சீட்டு , ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும். மகா சிவராத்திரியன்று பயறு, கிழங்கு வகைகள் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு சூரியன், சனி, புதன் பார்வை. குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும். அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் உங்களுக்கு எதிராக இருப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது.
கூட்டம் களைகட்டும் கல்லா களை கட்டாது. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு, பகைமை உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.
வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது அமைதியாக இருப்பது அவசியம் அமைதியால் அனைத்து பிரச்சினைகளும் அடிப்பட்டு போகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பயிற்சியை கடைபிடிப்பது நல்லது.தினமும் சுந்தரகாண்டம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
மாற்றங்களைப்பற்றி சிந்திக்கும் வாரம். வார இறுதியில் ராசிக்கு 7-ல் ராசி அதிபதி சூரியன் 7ம் அதிபதி சனி மற்றும் தனலாபாதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்ப்பது மிக உன்னதமான கிரக அமைப்பு. இன்னும் சில நாட்களில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் எதிலும் நிதானம் வேண்டும்.கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம். தொழில் சார்ந்த துறையில் உங்களின் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பொதுக் கூட்டத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக் கூடாது.
குழந்தைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்க வேண்டும்.பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை நகைகளை இரவல் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரும் பணம் புரளும் தொழில் மற்றும் வட்டித் தொழில் செய்பவர்கள் ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைக் கான முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக ரொக்க பணம் கையில் வைத்திருக்க கூடாது.தைப்பூசத்தன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் வாரம். லாப ஸ்தான வக்ர செவ்வாயால் அனைத்து எதிர்பார்ப்புகளும் ஈடேறும். வியாபாரம், தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும்.மன உளைச்சல் தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். பற்றாக்குறை பட்ஜெட் என்ற பேச்சிற்கே இடமில்லை. நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசு உத்தி யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படலாம். வீண், விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் குறையத் துவங்கும். மூத்த சகோதரம், சித்தப்பா, தாய், தந்தை ஆதரவு உண்டு. வீடு வாங்கும் முயற்சியில் இருந்த குழப்பங்கள் அகலும். புதுவிதமான ஆடம்பர பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் அதிகமாகும்.எதிர் பாலினத்தவரிடம் தேவையற்ற சகவாசத்தை தவிர்க்கவும். 3.2.2025 அன்று இரவு 11.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு இருக்கும்.எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக் கூடாது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியனும், தன லாப அதிபதி புதனும் ராசிக்கு 6-ல் மறைவு பெற்றுள்ளார்கள். எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும். கணவன், மனைவி தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் பணிபுரிய நேரும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்படலாம்.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும்.வாழ்க்கைத் துணைக்கு தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் அன்பு மிளிரும்.சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தில் சீராகும். நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பான திட்டமிடுதலில் ஆர்வம் அதிகரிக்கும். அமாவா சையன்று வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
மேன்மையான வாரம். லாப ஸ்தானத்தில் யோகாதிபதி செவ்வாயின் சஞ்சாரம்.மனதில் தன்னம்பிக்கை, தைரியம் மேம்படும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும்.
சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள்.அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்தினால் சங்கடங்களில் இருந்து தப்ப முடியும். பெண்களுக்கு கணவரால் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். சிலருக்கு கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். மாணவர்க ளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்து ழைப்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. தினமும் சிவபுராணம் படிப்பதும், கேட்பதும் நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியனுக்கு வக்ரகதியில் உள்ள யோகாதிபதி செவ்வாய் மற்றும் குருப் பார்வை. வேலைப்பளு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது.
வரவு இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. அதிக அலைச்சல் மிக பயணங்கள் செய்ய நேரும். சிலருக்கு தலைவலி, ஞாபக மறதி அல்லது காது, மூக்கு தொண்டை, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு மந்த தன்மையோடு எதிர்மறை சிந்தனையும் தோன்றி மறையும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். வீடு, அல்லது அலுவலகத்தை மாற்ற நேரும். மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் தொழிலுக்கு தேவையான இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம். திருமணத்தை தை மாதத்திற்குள் முடிப்பது நல்லது. பவுர்ணமியன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியனும் தன, லாப அதிபதி புதனும் சேர்க்கை பெறுவதால் பண வரவு பல வழிகளில் உருவாகும்.பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும். சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுபச் செலவுகள் செய்ய நேரும். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.
பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். விரைவில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. 5.1.2025 அன்று மதியம் 2.36 முதல் 7.1.2025 மாலை 5.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை
29.12.2024 முதல் 4.1.2025 வரை
எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறும். புத்திர பிராப்தம் உண்டாகும். பிள்ளைகளால் மன மகிழும் சம்பவம் நடைபெறும்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள்.நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும்.கடந்த கால கடன்கள், பிரச்சினைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சி செய்யலாம்.
அதற்கு தேவையான நிதியும், சந்தர்ப்பமும் தானாக உருவாகும்.வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. செலவு குறையும் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும்.விரைவில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். அமாவாசையன்று வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406