என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை
21.9.2025 முதல் 27.9.2025 வரை
கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். இது கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகரிக்கும். விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்துவிடும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
விடா முயற்சியும், உழைப்பும் சிந்திக்கும் திறனும் உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தந்தை வழி உறவுகளை அனுசரித்து சென்றால் இன்னல்கள் குறையும். குடும்ப வழக்குகளை ஒத்தி வைப்பதால் நிம்மதி அதிகமாகும். அதிக பொறுப்புகள், பணிச்சுமையால் சில நேரங்களில் சோர்வாகவும், விரக்தியுடனும் இருப்பீர்கள்.
பதவி உயர்வு ஊதிய உயர்வு பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். மாணவர்கள் கவனத்தை கல்வியில் செலுத்தினால் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியும். நவராத்திரி காலங்களில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை தானம் வழங்க தனவரவு இரட்டிப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்று இருக்கிறார். இது மிக சிறப்பான உன்னதமான கிரக அமைப்பாகும். தன வரவில் ஏற்பட்ட பற்றாக்குறைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்ய நேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடம்பர வீட்டைக் கட்ட திட்டமிடுவீர்கள். சிலரின் காதல் தோல்வியில் முடியும்.
பரம்பரைச் சொத்து, முன்னோர்களின் வங்கி சேமிப்பு இவற்றை பங்கிட உற்றார் உறவினர்கள் நிர்பந்திப்பார்கள் ஆடம்பர விருந்து, விழாக்களில் கலந்து இன்பம் அடைவீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். மகாளய பட்ச காலங்களில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு 7-ல் சந்திர கிரகணம் நடக்கிறது. உங்கள் நண்பர்களால் பண இழப்பு ஏற்பட்டு மன நிம்மதி குறையும். மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். வார்த்தைகளால் உறவுகளை காயப்படுத்தக்கூடாது.
திருமண முயற்சிகள் காலதாமதமாகும். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். பிள்ளைகளின் நடவடிக்கையை நன்றாக கண்காணிக்க வேண்டும்.
8.9.2025 அன்று மதியம் 2.29 மணி முதல் 10.9.2025 அன்று மாலை 4.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நியாயமற்ற பிரச்சினை என்றாலும் நிதானமாகப் பேசுங்கள். சிலருக்கு வாக்கு வாதத்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தினமும் சிவபுராணம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசியில் சூரியன், புதன், கேது சேர்க்கை உள்ளது. சூரியன் கேது சேர்க்கை கிரகண தோஷ அமைப்பா கும். 7.9.2025 அன்று சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் கிரகணதோஷ பாதிப்பு உண்டு. செலவுகளும், விரயங்களும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கும். வந்த பணம் அடுத்த நிமிடமே செலவாகலாம்.
இந்த காலகட்டத்தில் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது ஆகியவை களை தவிர்க்க எந்த பாதிப்பும் ஏற்படாது. வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் அரசியல்வாதிகள் மவுனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆளுமை மேலோங்கும். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.
கிரகணத்தன்று பகல் பொழுதில் அரை வயிறு சாப்பிட்டு சிவ வழிபாடு செய்வதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபட்டால் உடல் நலம் கூடும். நீண்டகால நோய் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று கேது உடன் இணைகிறார். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடுமனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும்.
சேமிப்பு கரையும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். அஷ்டமச் சனி மற்றும் ஜென்ம கேதுவின் தாக்கம் இருப்பதால் பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப் படும். விநாயகருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.
சிம்மம்
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பெற்று கேது உடன் இணைகிறார். இது கிரகண தோஷ அமைப்பாகும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும்.
சிலருக்கு புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு, கேதுக்கள் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு வேலை மாற்றம் செய்வது நல்லது. காது, மூக்கு தொடர்பான நீண்ட நாள் பிரச்சிினைகளுக்கு அறுவை சிகிச்சையில் தீர்வு கிடைக்கும். காலதாமத திருமணம் நல்லது. சிவ வழிபாடு செய்தால் சுப பலன்கள் இரட்டிப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
புதிய சொத்துக்கள் சேரும் வாரம். ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் நான்காம் அதிபதி செவ்வாய் நிற்கிறார். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும்.
வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி முதல் 14.8.2025 அன்று காலை 9.06 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு திரட்டுப்பால் வைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
லாபகரமான வாரம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும்.
பணவசதி சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். குடும்ப செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும்.
காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும். எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். வரலட்சுமி நோன்பு நாளில் ரோஜா மலரால் மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
சுமாரான வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் உள்ளது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் உண்டு. வருமான வரவில் குறையில்லை என்றாலும் நிறைவு ஏற்படாது. எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு சாப்பிட முடியாது.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் மூலம் சொத்து தகராறு, கருத்து வேறுபாடு போன்றவற்றை சந்திக்க நேரும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். கமிஷன் அடிப்படை வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயரும். லாபத்தை அதிகரிக்க புதிய விற்பனை யுக்திகளைக் கையாள வேண்டும். சம்பளம் குறைவாகவும் வேலை அதிகமாகவும் இருக்கும்.
பங்குச் சந்தை ஆர்வலர்கள் தகுந்த ஆலோசனையுடன் ஈடுபடுவது நல்லது. சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். மனைவி வழி சொத்தில் மாமனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வம்பு வழக்குகள் சீராகும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு புடவை அணிவித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாப அதிபதி புதனுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆன்மீக இயக்கங்கள், சமூக சேவையாற்றும் நிறுவனங்களில் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தான, தர்மங்கள் சமூக சேவை செய்வீர்கள். சிலர் வீட்டை புதுப்பிப்பீர்கள்.
சிலர் வாகனத்தை மாற்றுவார்கள். சிலர் புதிய வீடு, நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். சிலருக்கு செயல் திறன் குறைவுபடும். சொல்லாலும், செயலாலும் ஒன்றுபட முடியாது. வரவை விட செலவு மிகுதியாகும். பங்குதாரர்கள் மாறக்கூடும். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம்.
கடன் வாங்காமல் இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வந்து விடும். எந்த ஒரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். மாணவர்கள் கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது. எதிர்பாலினருடன் அளவாகப் பழக வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை தாமரை மலர் அணிவித்து அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
கவனமாக இருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாப அதிபதி புதனுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும்.
வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். பெண்களுக்கு தாய் வழி சீதனம் கிடைக்கும். சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் அஷ்டம சனியின் தாக்கம் குறையும். சிலருக்கு தெய்வ நம்பிக்கை குறையும்.
சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும். 15.7.2025 அன்று இரவு 11.58 மணி முதல் 18.7.2025 அன்று காலை 3.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார நிலையில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏற்றத் தாழ்வை சமாளிக்க கடன் பெறும் சூழல் உருவாகும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
அனைத்து இடையூறுகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும் வாரம். 13.7.2025 முதல் அடுத்த நான்கரை மாதங்களுக்கு சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கப் போவதால் அஷ்டம சனியின் தாக்கம் வெகுவாக குறையும். உங்கள் காரியங்களை தெளிவான மனநிலையோடு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும்.
மருத்துவச் செலவுகள், விரயங்கள் குறையும். அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறைய துவங்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும். வாடகை பணம், வராக் கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது.
உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தேவையில்லாத வீண் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அடமான நகைகள், சொத்துக்களை மீட்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. மற்றபடி விழிப்புடன் செயல்பட்டால் நன்மைகள் கூடி வரும். பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






