என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம். ராசியில் ஏக யோகாதிபதி செவ்வாய் கேது உடன் சேர்க்கை பெற்று இருக்கிறார். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும்.
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக டென்ஷன் குறையும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. சிறு கடன் சுமை இருந்தாலும் கடன்காரர்களின் கெடுபிடி குறையும். தம்பதிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி, புரிதல் உண்டாகும்.
வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்கள் எதிர்பார்க்கலாம். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். அல்லது விடுதியில் தங்கி படிக்கலாம். தந்தை-மகன் உறவு பலப்படும். அஷ்டம சனி நடப்பதால் வாழ்க்கையை பாதிக்கும். தடாலடியான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சிவ வழிபாடு மேன்மையான பலன் தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் வாரம். ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியில் ஏக யோகாதிபதி செவ்வாய் என கிரக நிலவரங்கள் மிக சாதகமாக உள்ளது. தொட்டது துலங்கும். பட்டது பூக்கும். கடனால் கவலை, கணவன்-மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும்.
சிலருக்கு புதிய மனை வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்கம்டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் கணக்கை முறையாக வைத்துக் கொள்வது அவசியம். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம்மிகும். பிள்ளைகள் உயர் கல்வி அல்லது உத்தியோகத்திற்காக வெளியூர் செல்லலாம். திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். அமாவாசையன்று முன்னோர்களை வழிபட்டு காகத்திற்கு சாதம் வைக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை
15.6.2025 முதல் 21.6.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சூரியன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர் நீச்சல் போட்டு வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும். கவுரவமான தோற்றம் உண்டாகும். பல வருடக் குடும்ப சிக்கல்கள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். சிக்கலான காரியங்கள் கூட நல்லவிதமாக முடியும்.
சமுதாயத்தில் பிறரை ஆச்சரியப்பட வைக்கும் உயர்வான நிலையை எட்டும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து மீதான வழக்குகள் சமாதானமாக பேசி முடிக்கப்படும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். விபரீத ராஜ யோகத்தால் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சீராகி உற்சாகமாக செயல்படுவீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும்.
பணி புரிபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். 18.6.2025 அன்று பிற்பகல் 6.35 முதல் 20.6.2025 இரவு 9.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கற்பனை கோட்டை கட்டி நேரத்தை வீணடிப்பீர்கள். புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும். தினமும் துர்க்கை கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
08.06.2025 முதல் 14.06.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் செவ்வாய் கேது சேர்க்கை இருப்பதால் குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்களால் உயர்ந்த சகோதர, சகோதரிகள் உங்களைப் பற்றி புறம் பேசுவது உங்களின் கவனத்திற்கு வரும். இதனால் உங்கள் குடும்பத்தில் அமைதி குறைவது போன்ற இனம் புரியாத மன உணர்வு தோன்றும். அது மன நிம்மதி குறைவை அதிகரிக்கும். சிலரின் வாரிசுகள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனிக் குடித்தனம் செல்வார்கள்.
புதிய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். அஷ்டம ஸ்தானத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் பதிவதால் எச்சரிக்கையாக செயல்படும் காரிங்களில் கூட சறுக்கல் ஏற்படலாம். பணம், ஜாமீன் அல்லது சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புரிதலுடன் செயல்பட்டால் இழப்பையும் லாபமாக மாற்றலாம். மாமனாரிடம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் உயர் கல்வியை தேர்வு செய்வதில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வயோதிகர்களுக்கு ஆயுள் பயம் அகலும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
01.06.2025 முதல் 07.06.2025 வரை
சுப காரியங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாப அதிபதி புதனுடன் தொழில் ஸ்தானத்தில் சேர்க்கை இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியாகும். குறுக்கு சிந்தனையில் இருந்து விடுபட்டு நேர்மையாக செயல்படுவீர்கள். தெளிவான திறமையான பேச்சால் நல்ல வியாபார வாய்ப்புகளை அடைவீர்கள். தொழிலுக்கு புதிய பங்குதாரர் கிடைப்பார்.
வரவு, செலவு வழக்கம் போல் இயல்பாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும். மூத்த மருமகன் சொத்து பிரிப்பதில் தன் ஆதிக்கத்தை செலுத்துவார். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லலாம். நீதிமன்ற வழக்குகளில் இருந்து எதிர்பாராத ஒரு இனிய செய்தி கிட்டும். அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
அரசு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் வேலை கிடைத்துவிடும். சிலரின் மறுமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகள் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். நெருங்கிய உறவில் மகளுக்கு வரன் அமையும். சிலர் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்குவார்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். தர்ம காரியங்களில் மனம்லயிக்கும். ஸ்ரீ ஆதி லட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
25.05.2025 முதல் 31.05.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் கேது. ஆன்மீக நாட்டம் கூடும். சிவ தொண்டு செய்வீர்கள். குல தெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் சிலர் விடுமுறைக்கு பூர்வீகம் வந்து செல்லலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். சிலருக்கு சுய தொழில் பற்றிய எண்ணம் அதிகரிக்கும்.
அஷ்டமச் சனி மற்றும் ஜென்ம கேதுவின் தாக்கம் முழுமையாக ஆரம்பம் ஆவதால் புதிய தொழில் தொடர்பான முயற்சியில் சுய ஜாதக பரிசீலனை அவசியம். ஆடம்பர விருந்து உபசாரங்கள், விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு வீடு, வாகன பராமரிப்பு செலவால் விரயம் உண்டாகும்.
கணவன் மனைவி உறவு திருப்தியாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனக்குழப்பம், டென்ஷன் குறையும். வருமானத்தில் நிலவிய பற்றாக்குறை அகலும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் தாமாக விலகும். அமாவாசையன்று கோதுமை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
18.05.2025 முதல் 24.05.2025 வரை
நிதானமாக செயல்பட வேண்டிய காலம். ராசி அதிபதி சூரியன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் குரு பகவான், ராசிக்குள் கேது பகவானும் ஏழாம் இடத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். தற்போது கோச்சார குரு பகவானும், ராசி அதிபதி சூரிய பகவானும் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. நாத்திகம் பேசியவர்கள் எல்லாம் ஆன்மீகம் பேசுவார்கள்.
எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உருவாகும். இந்த அமைப்பால் தொழிலில் ஏற்றமான பலன் உண்டு. கூட்டாளிகள் பிரிந்து செல்லலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் பணப்பரிவர்த்தனையில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணம் நடத்தலாமா என்பது பலரின் சந்தேகம்.
அஷ்டமச் சனி திருமணத்திற்கு உகந்த காலம் அல்ல. 22.5.2025 பகல் 12.08 மணி முதல் 24.5.2025 பகல் 1.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோ பயமும் நிலவும். அடுத்த இரண்டரை ஆண்டிற்கு சிவ வழிபாடு உங்களுக்கு சிறப்பு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
விபரீதராஜயோகமான வாரம். ராசி அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். எந்த கிரகம் உங்களை கை விட்டாலும் குரு பகவான் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.
வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். ஆயுள், ஆரோக்கியம், அறுவை சிகிச்சை சார்ந்த பயம் அகலும். குடும்ப உறவுகள் சந்திப்பால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வேலையை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
போட்டி பந்தயங்களை தவிர்க்க வேண்டும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகள் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும். சித்ரா பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை
4.5.2025 முதல் 10.5.2025 வரை
எண்ணங்கள் ஈடேறும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுகிறார். மலை போல் துயரம் வந்தாலும் பனி போல் நீங்கி விடும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் ஆதாயம் கிட்டும். பதவியில் நிலவிய குளறுபடிகள் நீங்கும். வேலை மாற்றத்திற்கான விருப்பம் நிறைவேறும். விவாகரத்து வரை சென்ற குடும்ப விஷயம் சீராகும். கணவன்-மனைவி அந்நியோன்யம் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல குணம் தெரியும்.
குடும்பத்தில் பிறரின் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வீடு, வாகன யோகம் உண்டு. அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் கிடைக்கும். புதிய ஆயுள் காப்பீடு, மெடிகிளைம் பாலிசிகள் எடுக்க உகந்த நேரம். ராசியை கேது நெருங்குவதால் அரசியல் பிரமுகர்கள் கட்சியையும், தொண்டர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். மனம், வாக்கு, இரண்டையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை. சரபேஸ்வரர் வழிபாடு நிம்மதியை கூட்டும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
நிதானமான வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க ஏற்ற நேரம். நண்பர்களும், பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள்.
பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், கமிஷன் தொழில் புரிபவர்களுக்கு நல்ல தொழில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். சிலரின் வாழ்க்கை துணைக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். உடல் உஷ்ணம் மற்றும் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். கணவன், மனைவியிடம் சிறு,சிறு மன பேதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது. நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுக்கு ஜாமீன் போடக்கூடாது. தினமும் ஆதித்திய ஹிருதயம் கேட்கவும் அல்லது படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
காரியத்தடை அகலும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியன் உச்சம் பெறுவதால் பிறர் எளிதில் செய்யத் தயங்கும் காரியத்தையும் நீங்கள் வெற்றிகரமாக செய்வீர்கள். அஷ்டமச் சனி முடியும் வரை திருமண முயற்சியை தவிர்க்கவும். வெளி நாட்டு குடியுரிமை முயற்சியில் வெற்றி உண்டாகும். புகழ் அந்தஸ்து உயரும். தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி முயற்சி கூடும்.
திற மைக்கும், தகுதிக்கும். தகுந்த உத்தியோகம் கிடைக்கும். சிலர் வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். சிலர் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக அடிக்கடி அலைச்சல் மிதந்த பயணம் செய்ய நேரும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தப்பட்ட முயற்சிகள் இழுபறியாகும்.
செயற்கை முறை கருத்தரிப்பு பலன் தரும். முதியவர்களுக்கு, அரசின் உதவித் தொகை, பென்சன் கிடைக்கும். 25.4.2025 அன்று காலை 3.25 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேண்டாத வேலையை அடுத்தவர் பிரச்சனையை இழுத்துப் போட்டு வீண் அவமானம், பிரச்சனையை சந்திப்பீர்கள். மேலும் சுப பலன் கிடைக்க மகிஷாசுரமர்த்தினியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை
13.4.2025 முதல் 19.4.2025 வரை
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவதால் ஆன்ம பலம் பெருகும். சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். அஷ்டமச் சனியினால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொட்டது துலங்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும்.பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்கு சுற்று பயணம் செய்து மகிழ்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும். வாடகை வருமானம் தரக் கூடிய சொத்துக்கள் சேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். வீண், இழப்புகள், விரயங்கள் நஷ்டங்கள் குறையத் துவங்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் அளவில் லாபங்கள் அதிகரிக்கும். வராத கடன்கள் வசூலாகும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். பேரன் பேத்தி பிறக்கும். அரச மரத்தடி விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






