search icon
என் மலர்tooltip icon

    சிம்மம் - வார பலன்கள்

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    2.10.2023 முதல் 8.10.2023 வரை

    தடைகள் தகறும் வாரம். ராசி அதிபதி சூரியன் உச்சம் பெற்ற தன, லாப அதிபதி புதனுடன் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவது சிம்ம ராசிக்கு மிகப்பெரிய யோகம். முன்னேற்றமான வாழ்க்கை வாழ நீங்கள் காணும் கனவுகள் நிறைவேறும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றியடையும். தொழிலில் வேலையில் ஏற்பட்ட பின்னடைவுகள் நீங்கும். வேலை இழந்தவர்களுக்கு இந்த வார இன்டர்வியூவில் சாதகமான பதில் உண்டு. வீடு, வயல், தோட்டம், மனை வாங்குவதில் நிலவிய சட்ட சிக்கல்கள் தீரும். தடைபட்ட கட்டுமானப் பணிகள் துரிதமாகும். கண்டகச் சனியால் ஏற்பட்ட உடல் உபாதைகள் அகலும்.வழக்குகள் சாதகமாகும். தேவைக்கு பணம் கிடைக்கும். விண்ணப்பித்த கடன் தொகைக்கு ஒப்புதல் கிடைக்கும். வாழ்க்கை துணை இணக்கமாக இருப்பார். சிதைந்த கூட்டுக் குடும்பங்கள் அன்பை பரிமாறுவார்கள். ஆரோக்கிய குறைபாடு அகலும்.பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டில் காரிய சித்தி கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் நடக்கும். மகாளயபட்ச காலத்தில் சிவாச்சாரியார்களின் தேவையறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன்

    25.9.2023 முதல் 1.10.2023 வரை

    கலகலப்பான வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாபாதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் குடும்ப பொறுப்புகள் கூடும். அதை சமாளிக்க கடுமையாக உழைக்க நேரும்.பற்றாக்கு றை பட்ஜெட் என்ற நிலை அகலும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். சில்லரை கடன்களை தீர்ப்பீர்கள். குடும்பத்தினருடன் புரிதல் உண்டாகும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திருமண முயற்சி திருப்திகரமாக முடியும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். கோபித்துக் கொண்டோ, மனவருத்தத்திலோ வீட்டை விட்டுப் போன உறவுகள் வீடு திரும்புவார்கள். வீடு கட்டும் பணி துரிதமடையும்.பிள்ளைகள் வழியில் தடைபட்ட சுப நிகழ்வுகள் கைகூடி வரும்.28.9.2023 இரவு 8.28 மணி முதல் 30.9.2023 இரவு 9.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கிடைக்கும் சந்தர்ப்பத்தை யும், வாய்ப்பையும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம்.வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். மகாளய பட்ச காலத்தில் தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆன்ம பலத்தை அதிகரிக்க வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    தனித்திறமைகள் மிளிரும் வாரம் . ராசி அதிபதி சூரியன் தன அதிபதி புதனுடன் பரி வர்த்தனை யோகம் பெறுகிறார். பாக்கிய அதிபதி செவ்வா யுடன் சேர்க்கை பெறுகிறார். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களை வழி நடத்தும். பொருள் வரவு திருப்தியாக இருக்கும். வாழ்க்கைப் பாதையில் நிலவிய குறுக்கீடுகள் அகலும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. கண்டகச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். பார்த்துச் சென்ற வரனிடம் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். சொத்து, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. பெண்களுக்கு அதீத வீட்டு வேலையால் களைப்பு அதிகரிக்கும். மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். காதல் விவகாரங்களை தவிர்ப்பது நல்லது.நெருக்கமான பழைய நண்பர்க ளின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபத்தையும் பெற சிவ பெருமானுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்ய மேன்மை கிட்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    11.9.2023 முதல் 17.9.2023 வரை

    உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று தன லாப அதிபதி புதனுடன் ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும்.உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. சொத்துச்சேர்க்கை, சொத்துக்களால் வருமானம் உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டு.காணாமல்போன, கைமறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிக்கான வாய்ப்பு கிடைக்கும்.நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். அறிமுக மில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். மறுதிருமண முயற்சி கைகூடும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும். பிரதோஷத்தன்று நெய் தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    4.9.2023 முதல் 10.9.2023 வரை

    குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ஏக யோகாதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமா னத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை இல்லை. சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் 5,8-ம் அதிபதி குரு வக்ரமடை வதால் மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நன்மைகள் நடைபெறும். வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். தந்தை, தந்தை வழி உறவுகளால் நன்மைகள் கூடும். தொழிலில் மன நிம்மதி, மன நிறைவு அடைவீர்கள் திருமணமாகாமல் ஏக்கத்தோடு இருந்த இளம் பருவத்தினருக்கு திருமணம் நடக்கும். காதல் விவகாரங்கள் சாதகமான நிலையை எட்டி கைகூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சி யான செய்தி கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். தினமும் கருடாழ்வாரை மனதார வழிபட வம்பு, வழக்குகளில் இருந்து மீள்வீர்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிபலன்

    28.8.2023 முதல் 3.9.2023 வரை

    மன சஞ்சலம் அகலும் வாரம்.ராசி அதிபதி சூரியன் குருபார்வையில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம், நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பய உணர்வு நீங்கும்.எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் மறையும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்த சர்ச்சைகள் விலகும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும்.குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.கடன் சுமை குறையும். பெண்களுக்கு சகோதரர் வகையில் வரவு உண்டு. கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும்.சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும்.1.9.2023 காலை 9.35 முதல் 3.9.2023 காலை 10.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். பிரதோஷத்தன்று சிவபுராணம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிபலன்

    21.8.2023 முதல் 27.8.2023 வரை

    நினைத்தது நிறைவேறும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சூரியன் தன லாபாதிபதி புதனுடன் குரு, சனி பார்வையில் சஞ்சரிப்பதால் தடைகள் விலகும். உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்சியுடன் இருப்பார்கள். ஆன்ம பலம் பெருகும். பணத்தை எவ்வாறு சம்பாதித்து சேமிப்பது என்ற கலையை கற்றுக் கொள்வீர்கள். தெளிவான திறமையான பேச்சால் நல்ல வியாபார வாய்ப்புகளை அடைவீர்கள்.தொழிலுக்கு புதிய பங்குதாரர் கிடைப்பார். நியாயமான கோரிக்கைக்கு உயர் அதிகாரி செவி சாய்ப்பார்.அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.பங்கு பத்திர ஆதாயம் உண்டு. தந்தைக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். அறுவை சிகிச்சை சுமூகமாகும். திருமணத்தடை அகலும்.மறுமண முயற்சி வெற்றி தரும். உயர் கல்விக்காக இடம் பெயரலாம். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். கருட பஞ்சமியன்று கருடரை தயிர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    14.08.2023 முதல் 20.8.2023 வரை

    அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் ராசியில் சஞ்சரிப்பதால் நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். சில்லரை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு தொழிலில் இயல்பு நிலை நீடிக்கும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் முன்னர் வேலை பார்த்து விலகிய வேலைக்கே மீண்டும் செல்வார்கள்.

    பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் சுமை குறையும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். உபரி பணத்தை பூமி, வயலில் முதலீடு செய்வீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் அனுமதி கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். ராசியை சனி பார்ப்பதால் சித்தப்பாவுடன் சிறு மோதல் மன அழுத்தம் மற்றும் டென்சன் ஏற்படலாம். வசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஆடி அமாவாசையன்று சிவனுக்கு பசும்பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    07.08.2023 முதல் 13.8.2023 வரை

    மனதில் இருந்த கவலைகள் மாறும் வாரம். 4,9-ம் அதிபதி செவ்வாய் தன லாப அதிபதி புதனுடன் ராசியில் சஞ்சரிப்பதால் பய உணர்வு, நோய் தாக்கம், சொத்துக்களால் பயனற்ற நிலை, வறுமை, மனவேதனை போன்ற பாதிப்புகள் விலகும். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். கடந்த ஒரு வருடமாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். 3-ம் அதிபதி சுக்ரன் வக்ரமடைந்து 3-ல் கேது சாதகமற்ற நிலையுடன் இருப்பதால் நீங்கள் எவ்வளவு உதவி செய்தாலும் உடன் பிறந்தவர்களுக்கு மன நிறைவு இருக்காது. சனி வக்ர நிவர்த்திக்கு பிறகு திருமண முயற்சி வெற்றி தரும்.

    ராசி அதிபதி சூரியன் ராகு, கேதுவின் மையப்புள்ளியில் இருப்பதால் அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்டகச் சனியின் தாக்கம் இருப்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது முக்கியம். வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடிக்க வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை சிவசக்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    31.7.2023 முதல் 6.8.2023 வரை

    விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தடைபட்ட நீண்ட நாள் முயற்சிகள் பேச்சுவார்த்தையில் சுமூகமாகலாம். ராசி அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடன் பெறுவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களின் திருமணம் அல்லது அவர்களின் குடும்பத்தை பராமரிப்பது, அவரின் கடனை ஏற்பது அல்லது அவருக்கு கடன் கொடுப்பது என விரயங்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

    கருத்து வேறுபாட்டால் பிரிக்காமல் கிடந்த முன்னோர்களின் பூர்வீகச் சொத்துக்கள் பிரிக்கப்படலாம். ராசியை சனி பார்ப்பதால் உங்களின் சித்தப்பா நல்லவராக நடித்து உங்களை ஏமாற்றுவார். அலைச்சல்கள் குறையும். தேக ஆரோக்கியம் சிறக்கும். சிலருக்கு சுப விரயமாக சொத்து சேரும். 4.8 .2023 இரவு 11.17 மணி வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பிறருக்கு ஆலோசனை வழங்குவதால் மனக்கசப்பு உண்டாகும். ஆடிப்பெருக்கு அன்று சிவசக்தியை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    24.7.2023 முதல் 30.7.2023 வரை

    சுபசெய்திகளால் மனம் மகிழும் வாரம். ராசியில் புதன் செவ்வாய், சுக்ரனுடன் சேர்க்கை பெற்று இருப்பதால் அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.புதிய வியாபார யுக்திகளால் அதிக லாபம் அடைவீர்கள்.வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். புத்திர பிராப்தம் ஏற்படும்.

    3-ல் கேது இருப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பாக சித்தப்பா உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும். திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள்.நிலுவையில் உள்ள சம்பளபாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும்.

    தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாகும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். கண்டகச் சனியை மீறிய நல்ல பலன்கள் நடக்கும்.தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சப்த மாதர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்த வார ராசிப்பலன்

    17.7.2023 முதல் 23.7.2023 வரை

    நன்மையும், தீமையும் கலந்த வாரம். ராசியை குரு, சனி பார்ப்பதால் அதிகார வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும். அரசுப் பணியாளர்க ளுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள், அரச மரியாதை கிடைக்கும். ராசி அதிபதி சூரியன் தன லாபாதிபதி புதனுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

    உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் ரீதியான கொள்முதலில் சிந்தித்துச் செயல்படவும்.அலுவலகப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். தொழில், உத்தியோக ரீதியான இடப்பெயர்ச்சியை சந்திக்கலாம்.

    சிலருக்கு வீடு, வாகன யோகம் போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு செல்லலாம். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். ஆடி வெள்ளிக்கிழமை சிவ, சக்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×