கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-02-12 03:55 GMT   |   Update On 2024-02-12 03:56 GMT

12.2.2024 முதல் 18.2.2024 வரை

புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உதயமாகும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் உச்சம். ராசியில் சப்தம ஸ்தான அதிபதி சூரியன். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும்.திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும்.பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண வரவு சரளமாகும். வாழ்க்கைத் துணைக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். தந்தையால் ஏற்பட்ட சிரமங்கள், விரயங்கள் படிப்படியாக குறையும். புத்திர பாக்கியம் ஏற்படும்.

குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். சிலருக்கு இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச்சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்ச்சியான விசயங்கள் நடந்து மனதை மகிழ்விக்கும். சிலருக்கு உயில் எழுதி வைக்க வேண்டும் என்ற சிந்தனை அதிகமாகும். சில பெண்களுக்கு புதிய சுய தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்படும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News