என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை
30.11.2025 முதல் 6.12.2025 வரை
கும்பம்
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். ராசியில் உள்ள ராகுக்கு குரு பார்வை கிடைக்கிறது. வாக்கு வன்மை பெருகும். எதிர்பார்த்த அனைத்து வகையிலும் வருமானம் உண்டாகும். வரா கடன்கள் வசூல் ஆகும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீடு வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும்.
சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள். மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும்.
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை
23.11.2025 முதல் 29.11.2025 வரை
கும்பம்
சுமாரான வாரம். ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். ராசிக்கு செவ்வாய் ராகு சம்பந்தம் உள்ளது. முன்னோர்களின் சொத்தில் முறையற்ற பங்கீடு கிடைக்கும். உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படும். வேலையில், தொழிலில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும்.
பொருளாதார விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியம். சிலரின் பிள்ளைகளுக்கு தொழில் முன்னேற்றமோ, அரசாங்கப்பணியோ தேடி வர வாய்ப்புள்ளது. கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஏழரைச் சனியால் எவ்வளவு இடையூறுகள் நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும்.
குழந்தை பேற்றில் உள்ள குறைபாட்டை நீக்க மருத்துவ உதவியை நாடலாம். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். கார்த்திகை மாத சோம வார சங்கு பூஜையில் கலந்து கொள்ள சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
கும்பம்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். தன, லாப அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் வக்ர கதியில் உள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சில நேரங்களில் உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழலாம். கண் திருஷ்டி மற்றும் காரியத் தடை உண்டாகும். வாழ்க்கையை பாதிக்கும் புதிய முயற்சிகளை தவிர்த்தல் நன்மை தரும்.
எந்த செயலையும் பல முறை யோசித்து திட்டத்தை செயல்படுத்தும் தைரியம் இருந்தாலும் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். உடன் பிறந்தவர்களுடன் குறிப்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு வரும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். கணவன், மனைவி குடும்ப பிரச்சினைகளை தங்களுக்குள்ளே தீர்த்து கொள்தல் நலம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் நாடு மாற்றம் வரலாம்.17.11.2025 அன்று மதியம் 3.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
கும்பம்
தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 4-ம் பார்வை உள்ளது. கும்பத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் ராசியை பார்ப்பது சுபமான பலன் அல்ல. கோபுர கலசம் போல உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினருக்கு இது சவாலான காலமாகும். தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம்.
சிலருக்கு பரம்பரை நோய்களான சுகர், பிரஷர், கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் அதிகமாகும். பாகப்பிரிவினையால் மன பேதம் மிகுதியாகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். 15.11.2025 அன்று அதிகாலை 3.51 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். இல்வாழ்க்கையில் பற்று குறையும். தினமும் ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை
2.11.2025 முதல் 8.11.2025 வரை
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம். ராசியில் உள்ள ராகுவை 3,10ம் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு கிடைக்கும் வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றிய முடிவு எடுக்க சாதகமான காலம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வயோதிகர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வெகு நாட்களாக தாமதப்பட்ட பணிகள் இந்த வாரம் சாதகமாகும். அனைத்து பாக்கியங்களும் தேடி வரும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிறிய தொகை கடன் வாங்க நேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
கும்பம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் யோகமான வாரம். தொழில் ஸ்தானத்தில் 3,10ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 5,8ம் அதிபதியான புதனுடன் குரு பார்வையில் இருப்பதால் பண வரவு அமோகமாக இருக்கும். அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும்.
குலத் தொழிலில் பங்குதாரராக இணைவீர்கள். அல்லது குலத்தொழில்களை எடுத்து நடத்துவீர்கள். இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. உடன் பிறந்தவர்கள் மூலமாக வருமான உயர்வுக்கான பாதை தென்படும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். காதல் கல்யாண கனவுகள் நனவாகும்.
சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். கந்த சஷ்டி அன்று சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிப்பலன் 19.10.2025 முதல் 25.10.2025 வரை
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் நிற்கிறார்கள். வேற்று மத இன நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குறுக்கு வழியில் முன்னேறும் எண்ணம் மிகுதியாகும். ராசிக்கு தற்போது குரு பார்வை இல்லாததால் திருமண விசயத்தில் கவனம் தேவை. உடல் உபாதைகளால் மன சஞ்சலம் அதிகமாகும்.குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள்.
தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். வாகன வசதிகள் மேம்படும். வாரிசு உருவாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். தீபாவளி ஆபரில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 21.10.2025 அன்று காலை 9.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பாக சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. 9ல்சூரியன் நீச்சமாக இருப்பதால் அமாவாசையன்று பித்ருக்கள் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
நெருக்கடிகள் விலகும் வாரம். தன ஸ்தானத்திற்கு குருப்பார்வை கிடைப்பதால் உங்களின் பல வருட எதிர்பார்ப்புகள் இந்த வாரத்தில் நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்து நிம்மதி அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.
வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். குல தெய்வ வழிபாடு பலன் தரும். முக்கிய பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும் நிறைவு செய்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மானியத்துடன் கடன் கிடைக்கும். வாக்கு வன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். சின்னத்திரை, சினிமா கலைஞர்களின் புகழ், அந்தஸ்து கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டு தீபாவளி சீதனம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சிலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. சிலருக்கு மறு விவாகம் நடக்கும். உடல் ஆரோக்கியமடையும். காவல் தெய்வங்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். அடுத்து வரும் 48 நாட்களுக்கு ராசியில் பதிந்த குருவின் பார்வை விலகப் போகிறது. ராசியில் தனித்த ராகு நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. வரவிற்கு மீறிய செலவு இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது.
போட்டிகளைச் சமாளிக்க உழைக்கவேண்டி வரும். கடன், எதிரி தொல்லை அதிகமாகும் என்பதால் புதிய முயற்சிகள் அதிக முதலீடு ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. மூத்த சகோதரம், சித்தப்பாவால் வம்பு, வழக்கு, கடன் உண்டு. சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
உறவுகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். வழக்கு விசாரணை தள்ளிப்போகும். சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சனி தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானமும், சந்தோஷமும் அதிகரிக்கும். கும்ப ராசியினருக்கு ராஜயோக அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் வாரமாகும். பேச்சில் தெளிவு இருக்கும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும்.
ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிதமாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகன்று எதிர்ப்புகள் இல்லாத நிலை உருவாகும். கோச்சார சர்ப்ப தோஷத்தால் சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம்.
அரசு வழி காரியங்கள் சித்திக்கும். தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் நிலவிய போட்டி பொறாமைகள் மறையும். பய உணர்வு நீங்கும். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற வாக்கு பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை
21.9.2025 முதல் 27.9.2025 வரை
செல்வநிலை உயரும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்கிரனின் பார்வை உள்ளது.இந்த கிரகங்களின் பார்வை ராசியில் உள்ள ராகுவால் ஏற்பட்ட எதிர்மறை பாதிப்புகளை குறைக்கும். நடைமுறை வாழ்வில் நிலவிய சிக்கல்களை சரி செய்வீர்கள். நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். அவ்வப்போது சிறிய பிரச்சினைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டீர்கள்.
பொன் பொருள் பூமி சேரும் வாய்ப்புகள் உள்ளது. கோச்சார ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து திருமணம் நடக்கக்கூடிய சூழல் உருவாகும். இறைவழிபாட்டில் ஆர்வம் கூடும். குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி முயற்சியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தொழிலுக்கு வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும்.
21.9.2025 அன்று மாலை 3.58 மணி முதல் 24.9.2025 அன்று அதிகாலை 2.56 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்படுத்த முடியாத திடீர் முடிவுகளால் மன வருத்தங்கள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்கு சிறு சிறு மனச் சங்கடங்கள் உண்டாகும். நவராத்திரி காலங்களில் ஆதிபராசக்தியை வழிபட்டால் சுய ஜாதகத்தில் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
புதிய எழுச்சியுடன் வலம் வரும் வாரம். ராசிக்கு சுக்ரன் பார்வை உள்ளது. நிம்மதி இரட்டிப்பாகும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும்.தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறைசக்தியை உணர்வார்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு.
வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமை நிலவும். போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவத்தால் குணமடைவார்கள்.
அரசு உயர் அதிகாரிகளின் தனித் திறமைமிளிரும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் துப்புரவு தொழிலாளிகளின் தேவையறிந்து உதவுவதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






