என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய வாரம். ராசியில் ஆறாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ளார். இது சந்திர கிரகண தோஷ அமைப்பாகும். இதற்கு தன லாபாதிபதி குருவின் பார்வை இருப்பது ஓரளவு சாதகமான பலனை தரும். எனினும் மனசுக்குள் பய உணர்வு மிகுதியாக இருக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனால் மன உளைச்சல் அதிகமாகும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை முடிந்து விட்டால் பாதிப்புகள் சற்று குறைந்து விடும். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் அலைச்சல், அலுப்புகள் அதிகமாகும்.
பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும். குடும்பப் பெரியவர்களை, இறந்தவர்களை நிந்தித்து பேசக்கூடாது. தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும். தாய், தாய் வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய வாரம்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசியில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்பட போகிறது. இது கிரகண தோஷ அமைப்பாகும். 7.9.2025 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் தோன்றுவதால் மனதில் வெறுமை பய உணர்வு இருக்கும்.அஜீரண கோளாறு உண்டாகும்.அடுத்த சில நாட்களுக்கு கடன் நெருக்கடி, நோய் தாக்கம், எதிரி தொல்லைகள் கூடும்.
கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை இருக்கும் மாணவர்கள் பாடங்களை அக்கறையுடன் கவனத்துடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். திருமண விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக நடக்கும். எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது.வேலை மாற்றம் செய்யக்கூடாது. பெண்கள் மாங்கல்யம் மாற்றுவதை தவிர்க்கவும்.
மிகுதியான கோபம், பிடிவாதத்தை தவிர்த்தால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். எந்த புதிய முயற்சியாக இருந்தாலும் 15 நாட்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது. பிரதோஷ நாட்களில் வாசனைத் திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்து நந்தி பகவானை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உண்டாகும் வாரம்.ராசியில் ராகு ஏழில் சூரியன் கேது சேர்க்கை உள்ளது.எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும். பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும்.
அதிக வேலை பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 25.8.2025 அன்று காலை 8.29 முதல் 27.8.2025 அன்று இரவு 7.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். விநாய கருக்கு கடலை உருண்டை வைத்து வழிபடவும்.
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும் வாரம். சம சப்தம ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி செய்வதால் முட்டுக்கட்டைகள் அகலும். முயற்சிகள் உடனே நிறைவேறும். புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை, நாணயம் உயரும். உங்களின் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.
இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாட்டு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றங்கள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும். தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாலோ இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம்.
சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்பனையாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள். தினமும் ஆதித்ய ஹிருதயம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
பணவரவு, வருமானம் கூடும் வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். லாப ஸ்தான பலத்தால் வருமானம் அதிகரிக்கும். புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும்.
வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம்.
நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பால் சாதம் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசியில் ராகு 7-ல் கேது 8-ல் செவ்வாய் நிற்பதால் பெண்களுக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். கற்ற கல்வியால் வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர் பார்த்தபடி பதவி கிடைக்கும்.
அரசாங்க காரியங்களில் இலாபமும் அனுகூலமும் ஏற்படும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். கூலித் தொழிலாளிகளின் நிலமை சீராகும். ஆடி மாதம் என்பதால் சாலையோர பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும்.
உயர்ந்த ரக வாகன வசதி அமையும். பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், அதிக கடன் வாங்கி சமயத்தில் சிரமப்படுவார்கள். எதிரிகள் தொல்லை குறையும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். வரலட்சுமி விரத நாளில் சந்தன அபிஷேகம் செய்து மஹாலக்ஷ்மியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
அதிக நற்பலன்கள் நடக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சுக்ரன் சேர்க்கை இருப்பதால் கடந்த காலத்தில் நிறைவேறாத சில எண்ணங்கள் ஈடேறும். சிந்தனை மற்றும் செயல்பாட்டில் புதிய மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். திடீர் அதிர்ஷ்டம், லாட்டரி, உயில் மூலம், போட்டி பந்தயம் மூலம் எதிர்பாராத தன வரவு ஏற்படும்.
பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடியவர்களுக்கு இயற்கையாகவே கர்ப்பம் உருவாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக ரீதியாக எத்தகைய திருமணத் தடை இருந்தாலும் நீங்கி திருமண பாக்கியம் கூடி வரும்.
பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களின் முயற்சி சாதகமாகும். 28.7.2025 அன்று பகல் 12 மணி முதல் 31.7.2025 அன்று பகல் 11.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் தோன்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்று கால தாமதம் உண்டாகும். ஜாமீன் விசயங்களில் தலையிடக் கூடாது.நாக சதுர்த்தி அன்று புற்று வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
செல்வ நிலைகள் உயரும் வாரம். ராசியை தன லாப அதிபதி குருபகவான் பார்க்கிறார். கையில் பணமும், மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். புதிய திட்டங்களில் ஏற்பட்ட தடைகள், தாமதங்கள் அகலும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பம் அமையும்.
பூமி, வீடு, வாகனம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலமான உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடப்பெயர்ச்சி உண்டாகும். சிலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.
வீண் விரயங்களும், வைத்தியச் செலவும் குறையும். சிலருக்கு தந்தையுடன் சிறு மன பேதம் ஏற்படலாம். பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை
13.7.2025 முதல் 19.7.2025 வரை
சிந்தனைகளை மேம்படுத்த வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாய் மற்றும் குருவின் பார்வை உள்ளது. எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். சிலருக்கு அரசாங்க விருதுகள், அரச மரியாதை கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரால் நன்மைகள் ஏற்படும். பதவி உயர்வு ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்கள் அனைத்தும் நடைபெறும்.
புதிய வியாபார யுக்திகளால் அதிக இலாபம் அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தடைபட்ட புத்திர பிராப்தம் சித்திக்கும். தாயாரின் சொத்துக்களைப் பிரிப்பதில் சகோதர சகோதரிகளால் இடையூறு மன உளைச்சல் உண்டாகும். சிலரின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்கும்.
வாழ்க்கைத் துணை, வியாபார பங்குதாரரிடம் அனுசரித்து செல்ல வேண்டிய காலம். சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். எந்த காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். தினமும் குபேரன் மூல மந்திரம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
நன்மையும், தீமையும் கலந்த வாரம். ராசியில் ராகு ஏழில் செவ்வாய் கேது உள்ளதால் திருமணத்தடை வரலாம். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம். வியாபாரிகள் சந்தையில் நேரடி கொள்முதலில் ஈடுபடுவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆனால் விரும்பிய இட மாற்றங்கள் கிடைக்காது. படிப்பை முடிக்கும் மாணவர்கள் சிலர் பெரிய நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெறுவார்கள்.
கூட்டு குடும்பத்தில் சில சிறிய விஷயங்களால் வாழ்க்கை துணையுடன் சிறு மனக் கசப்பு ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது. பூர்வீகத்தில் வீடு, மனை வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும். பவுர்ணமி அன்று ராகு கேது வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை
29.6.2025 முதல் 5.7.2025 வரை
அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும் வாரம். ராசியில் ராகு, குரு பார்வையில் சஞ்சாரம் செய்கிறார். ராகு உங்களுக்கு குறுக்கு வழியில் சில அதிர்ஷ்டங்களை பெற்றுத்தரலாம்.
நிதி நிலைமையை மேம்படுத்தி நிரந்தரமான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம். செயற்கை முறை கருத்தரிப்பை அணுக உகந்த காலம். பூர்வீக சொத்து தொடர்பான விசயங்களில் பிற இனத்தவர் அல்லது மதத்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். செல்வந்தர்கள் அல்லது அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.
திருமண முயற்சி வெற்றி தரும். சிலருக்கு தோட்டம், தோப்பு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அலுவலக பிரச்சினைகள் தீரும். உடல்நலம் சீராக இருக்கும். 1.7.2025 அன்று மாலை 3.24 மணி முதல் 4.7.2025 அன்று 3.19மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தாருடன் வீண்வாக்கு வாதத்தை தவிர்க்கவும். எதிர்பாராத பயணம் கடினமாகவும், மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை
22.6.2025 முதல் 28.6.2025 வரை
குடும்ப சுமை குறையும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாய் பார்வை உள்ளதால் உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். வசீகரமான தோற்றம் ஏற்படும். வீண் பிடிவாதம், முன் கோபம் குறையும். தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுப்பீர்கள். எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் பலமும் உண்டாகும்.
அனைவரும் வியக்கும் வகையில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை மாற்ற எண்ணம் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், சகோதர, சகோதரிகள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். திருமணத் தடை நீங்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து , கேரண்டி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். கோவில் யானைக்கு அருகம்புல், பழம், கரும்பு தரவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






