என் மலர்tooltip icon

    கும்பம் - வார பலன்கள்

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை

    15.6.2025 முதல் 21.6.2025 வரை

    நல்லாசிகள் நிறைந்த வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் ஆட்சி செய்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் மனக் குழப்பம் அகலும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள், குல தெய்வ நல்லாசிகள் கிடைக்கும். பூர்வீகம் சென்று வருவீர்கள். தொழில் வளம் சிறக்கும். நிம்மதியாக தொழிலை நடத்துவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.

    சொத்து விற்பனையில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், மறைமுக எதிரிகளால் சில பிரச்னைகளும் ஏற்படலாம். தரகு மற்றும் ஒப்பந்த தொழில் நடத்துபவர்கள் தொழில் ஆதாயம் சிறப்பாக இருக்கும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள். வீட்டில் சுப மங்கள நிகழ்விற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். காதல் திருமண முயற்சிகள் சற்று இழு பறிக்குப் பிறகு சாதகமாகும்.

    சிலருக்கு புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடமாற்றம் கிடைக்கும். அலைச்சல் மிதந்த பயணத்தால் டென்ஷன் அதிகரிக்கும். தினமும் ஸ்ரீ சுப்ரமண்ய பூஜங்கம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

    08.06.2025 முதல் 14.06.2025 வரை

    நிம்மதியான வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. குடும்பத்திற்கு அதிகமான வருவாய் கிடைக்கும். அரசின் சட்ட திட்டத்தால் ஏற்பட்ட தொழில் இடர்கள் அகலும். இடமாற்றத்தை எதிர் பார்த்தவர்களுக்கு சொந்த ஊருக்கே வேலை மாற்றம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் விசயத்தில் நன்கு அறிமுகமானவர்கள் மூலம் கடன் கிடைக்கும்.

    உறவினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். இடம் பொருள் ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வீர்கள். அதிகாரமான தெளிவான பேச்சால் தனத்தை பெருக்குவீர்கள். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடிவரும்.

    பெயர், புகழ் அந்தஸ்தை உயர்த்தும் கெளரவம் பதவி உண்டு. நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க ஏற்ற வாரம். இந்த வாரம் திருமணம் நிச்சயமாகிவிடும். வீட்டில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் குறையும். அரசியல் மற்றும் பொது ஜன தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்மைகள் சேரும். ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். சனிக்கிழமை சனி பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை

    01.06.2025 முதல் 07.06.2025 வரை

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சனி தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொடர் பண வரவு இருந்து கொண்டே இருக்கும். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் சாதனை படைப்பீர்கள். கம்பீரமான தோற்றம் உண்டாகும். மனதைரியம் அதிகரிக்கும். சகல சவுபாக்கியங்களும் தேடிவரும். குடும்ப குழப்பங்கள் சீராகும்.

    பேச்சில் அனுபவ முதிர்ச்சி தெரியும்.வளமான நிம்மதியான எதிர் காலத்திற்கான அறிகுறிகள் தென்படும். மனக்குழப்பம் நீங்கி நிம்மதியும் தெளிவும் பிறக்கும். வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். திருமணத்திற்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும்.

    சுற்றமும், நட்பும் நிறைந்த சூழலில் கோலாகலமாக திருமணம் நடைபெறும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.4.6.2025 அன்று காலை 7.35 முதல் 6.6.2025 அன்று இரவு 8.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த செயலில் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படவும். முக்கிய காரியங்கள் இழுபறியாகும். அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கவும். ஸ்ரீ அதிர்ஷ்ட லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    ஏற்றம் இறக்கம் நிறைந்த வாரம். ராசியில் ராகு. ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை. ஆசைகளால் மனம் அலைபாயும். வழக்குகளால் நிம்மதி குறையும். மனத் தடுமாற்றம் உண்டாகும். வெளி நாட்டு தொழில் மூலம் அபாரமான பண வரவு கிடைக்கும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும்.திருமணத்திற்கு வெளியூர் வரன் அமையும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

    தேவையற்ற நட்புகள், உறவுகளின் தொல்லைகள் உண்டாகும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும். உறவினர்களுக்கு செய்யும் உதவி உபத்திரமாக முடியும். சிலர் கவுரவம் அல்லது பெருமையை நிலைநாட்ட வீண் செலவு செய்வார்கள். சிலர் காசி, மானசரோவர் போன்ற தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வரலாம்.

    வாரிசுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று இனத்தவர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். யாரையும் நம்பி அகலக்கால் வைக்கக்கூடாது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். அமாவாசையன்று எள் சாதம் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு குருப்பார்வை இருப்பதால் எதிர்மறை சிந்தனைகள் அதிகமாகும். வேலையில் சக ஊழியர்களால் பிணக்குகள் அதிகரிக்கும். வேறு நல்ல வேலை கிடைக்காதா என்ற ஆதங்கம் மேலோங்கும். பார்க்கும் வேலையை விட்டால் அடுத்த குருப்பெயர்ச்சி வரை வேலை கிடைப்பது சிரமம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

    திருமணத் தடை இருக்கும். கையில் பணம் தங்காது. நேரத்திற்கு சாப்பாடு கிடைக்காது அல்லது சாப்பிட முடியாது. தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வேலையாட்களால் பொருள் திருடு போகும்.

    எதிரிகள் தொல்லை குறையும். நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். சொத்து தொடர்பான முயற்சிகள் சித்திக்கும். தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். பள்ளி விடுமுறை காலத்தை குழந்தைகளுடன் இன்பமாக கழிப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். சிவ சக்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    சுமாரான வாரம். குரு பகவான் பஞ்சம ஸ்தானம் செல்கிறார். 5ல் குரு கெஞ்சினாலும் கிடைக்காது என்பது பழமொழி. 5ம்மிட குருவால் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் போகிறீர்கள். ஆனால் ராசிக்குள் ராகு வரப்போகிறார் என்ற பயம் இருக்கத்தானே செய்யும். குரு ராகு சம்பந்தம் குருச் சண்டாள யோகம். பிறப்பு ஜாதக ரீதியாக குரு, ராகு தசா, புத்தி நடந்தால் பொருளாதார மேன்மை உண்டு.

    கிடைத்த பணத்தை முறையாக சேமித்து பயன்படுத்துவது உங்கள் கையில் உள்ளது. சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரவத்திற்காக வலியச் சென்று அகப்படுவார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள்.

    செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பண முதலீடு செய்ய வேண்டாம். காதல் அவமானத்தை தேடி தரும். குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். சித்ரா பவுர்ணமி அன்று சத்திய நாராயணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியை ராகு பகவான் நெருங்கிக் கொண்டு இருக்கிறார். இன்னும் வெகு சில நாட்களில் ஜென்ம ராகுவாக பலன் தருவார். உங்களின் மேல் அக்கறை, மதிப்பு, மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கிய சந்தர்ப்பமாக இந்த ஒன்றரை ஆண்டுகள் இருக்கும். சிலர் மனமாற்றத்திற்கு குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம்.

    வேலைப்பளு மிகுதியாகும். தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி உண்டாகும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். 8.5.2025 அன்று நள்ளிரவு 12.57 மணி முதல் 10.5.2025 பகல் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிந்தனையிலும், செயலிலும் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். இந்த நாட்களில் உங்கள் பணத்தை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அபிராமி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகும் வாரம். 7ம் அதிபதி சூரியன் ராசிக்கு 3ல் உச்சம் பெறுவதால் குழந்தை பேறு முயற்சி பலன் தரும். இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகிறது. சிலருக்கு புதிய வேலை பற்றிய எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். மறைந்து கிடந்த உங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும்.

    கவுரவப் பதவிகள் கிடைக்கும். மாமியார் மற்றும் மாமனாரால் வரவு உண்டாகும். பெண்களுக்கு குடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வேற்று இன, மத நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். சிலரின் மறுமண முயற்சி சித்திக்கும்.

    அரை குறையாக நின்ற கட்டிடப்பணிகள் தொடரும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும். சுப செலவுகள் செய்ய நேரும். மருமகள், மருமகன் பூர்வீக சொத்து பிரிவினையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். தினமும் விநாயகர் கவசம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    நிதானமாக செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாயின் 8ம் பார்வை. தன வரவில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு குடும்ப நபர்கள் கட்டுப்படுவார்கள். வாக்கு வன்மை பெருகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். இந்த வாரத்தில் உயில் எழுதலாம். முக்கிய ஆவணங்களில் திருத்தம் செய்லாம்.

    சிலர் அவசரத்தனமாக பட்டா இல்லாத சொத்தை வாங்கலாம். சிலர் ஜாமீன் போட்டு ஏமாறலாம். சிலருக்கு தோல் அலர்ஜி மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. சிலருக்கு வீடு கட்ட அரசின் மானியம் கிடைக்கும்.

    ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுய தொழில் நடத்துபவர்கள் கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதைத் தவிர்க்கவும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதாயம் உண்டு. இன்னும் ஒரு மாதத்தில் ராசிக்குள் ராகுவும் பஞ்சம ஸ்தானத்திற்குள் குருவும் செல்லப் போகிறார். உங்கள் வாழ்க்கை பக்கத்தை மாற்றப் போகிறார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிரதோஷ நாட்களில் நந்திக்கும், சிவனுக்கும் பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம். ஜென்மச் சனி காலத்தில் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். செவ்வாயின் எட்டாம் பார்வை ராசியில் பதிவதால் காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும்.

    பெண்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதற்குத் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த வராக்கடன் பணம் வீடு தேடி வரும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். மன வேதனையைத் தந்த மகள் உங்களைப் புரிந்து கொள்வார். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    அதிர்ஷ்டகரமான வாரம்.பூர்வ புண்ணியாதிபதி புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்துக் கொண்டால் உழைப்பிற்கேற்ற பலனை அடைய முடியும். உறவுகளிடம் நிலவிய பகை மறையும். ஜென்மச் சனியின் தாக்கம் குறைந்ததால் வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

    குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம்.வழக்குகள் சாதகமாகும்.பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு, மனை, தோட்டம் வாங்கலாம்.பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.தங்கம் வாங்குவீர்கள். 10.4.2025 அன்று இரவு 7.04 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வரலாம். போட்டி பந்தயங்களால் மன உளைச்சல் அதிகமாகும்.சிவன் கோயிலில் உலவாரப் பணிகள் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    மனச் சுமை தீரும் வாரம்.ஜென்மச் சனியால் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு.விலகிய உறவுகள் புரிந்து கொள்வார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். அவர்களால் ஏற்பட்ட மனக் கஷ்டம் தீரும்.சுபச் செய்திகள் சுபவிரயங்கள் ஏற்படும். வீட்டில் பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

    தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். நண்பர்களின் ஆதரவால் முக்கிய சில பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கடன் கட்டுக்குள் இருக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். பொது வாழ்வில் புகழும், பெருமையும் உண்டாகலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×