என் மலர்tooltip icon

    கும்பம் - வார பலன்கள்

    கும்பம் - Kumbam

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    மனச்சுமை தீரும் வாரம். ஜென்மச் சனியால் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள். வீடு, வாகனம் போன்ற சுபச்செலவு ஏற்படலாம். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. விலகிய உறவுகள் புரிந்து கொள்வார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். அவர்களால் ஏற்பட்ட மனக்கஷ்டம் தீரும். சுபச் செய்திகள் சுபவிரயங்கள் ஏற்படும். வீட்டில் பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும்.

    நண்பர்களின் ஆதரவால் முக்கிய சில பிரச்சனைகள் முடிவிற்கு வரும். கடன் கட்டுக்குள் இருக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். பொது வாழ்வில் புகழும், பெருமையும் உண்டாகலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை

    23.3.2025 முதல் 29.3.2025 வரை

    புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.ஜென்மச் சனியின் பாதிப்பு குறைகிறது.உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் உயரும். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். புதிய அனுபவம் உண்டாகும் நெருங்கிய நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதனால் கடன்களும், சிக்கல்களும் தீரும். பெண்களின் வெற்றிக்கு கணவரின் ஆதரவு இருக்கும்.

    மாமியாரின் பாராட்டு மகிழ்ச்சியைத் தரும். மனைவிக்கு வேலை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். லாபம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருந்தாலும், பணியில் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படலாம். வைத்தியம் பலன் தரும். அமாவாசையன்று முதியவர்களின் தேவையறிந்து உதவவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை

    16.3.2025 முதல் 22.3.2025 வரை

    சூப்பரான வாரம்.தன ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை.மன நிறைவான வாழ்க்கை, ஆரோக்கி யமான உடல் நிலை, லாபகரமான வருமானம் ஆகியவற்றை இந்த வாரத்தில் காணப்போகிறீர்கள். திருமணம், குழந்தைப் பேறு என மகிழும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும். பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும்.சொல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப் போகிறது. எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.

    வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். உடல் நலனில் நிலவிய குறை கள் அகலும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். 17.3.2025 அன்று நள்ளிரவு 1.15 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சனிக்கிழமை காகத்திற்கு அன்னம் வைத்து சனிபகவானை வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை

    9.3.2025 முதல் 15.3.2025 வரை

    ஆதாயம் நிறைந்த வாரம். வார இறுதி ராசியில் மீன ராசி செல்கிறார். இனி 30 வருடம் கழித்து தான் ராசியில் சூரியன் சனி சேர்க்கை உண்டாகும்.தலைமைப் பதவி தேடி வரும். தடைபட்ட வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் வராக்கடன்கள் வசூலாகும். உழைக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். பங்காளிகளால் ஏற்பட்ட பாகப்பிரிவினை வருத்தங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்காவிட்டாலும் சுமூகமாக நல்ல முறையில் சொத்து கிடைக்கும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.

    குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். உங்களை உதாசீனம் செய்தவர்கள் நயந்து பேசுவார்கள். உங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றி உணருவார்கள். 14.3.2025 அன்று மதியம் 12.56க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உறவினர்கள் மூலம் கொடுக்கல், வாங்கலில் சிறு மனக்கசப்பு தோன்றலாம். மாசி மகத்தன்று திருக்கோளாறு பதிகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை

    02.03.2025 முதல் 08.03.2025 வரை

    சூப்பரான வாரம். ராசி அதிபதி சனியுடன் 7-ம் அதிபதி சூரியன் இணைவதால் வாழ்க்கைத் துணையின் யோகத்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு அந்தஸ்தான வேலை கிடைக்கும்.

    குறைந்த முயற்சியில் நிறைவான வருமானம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். பண வரவு தாராளமாக இருப்பதால் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆடம்பர பொருட்களின் சேர்க்கையும், சேமிப்பும் அதிகரிக்கும். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும்.

    வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பல வருடங்களாக தடைபட்ட திருமணம், பேசி நிச்சயித்து நின்ற திருமணங்களும் நன்றாக நடைபெறும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும்.

    ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. எதிர் பாலினத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகும். சிலருக்கு அந்தஸ்தான சொகுசு கார் வாங்கும் அமைப்பு உண்டாகும். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை

    23.2.2025 முதல் 01.03.2025 வரை

    மாற்றங்கள் உண்டாகும் வாரம் ஏழரைச் சனியின் 3-ம் பாகம் ஆரம்பமாகப் போகிறது. இரண்டாவது சுற்று ஏழரைச் சனி நடப்பவர்களுக்கு பொங்கு சனியாக செயல்பட்டு புதிய நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளிப்படுத்த முடியாமல் முடக்கி வைத்திருந்த திறமைகள் வெளிப்படும்.

    வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். அரியர்ஸ் சம்பளம். ஓவர் டைம் ஊதியம் இப்பொழுது கிடைக்கும். சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

    வேலை பார்க்குமிடத்தில் எதிர் பாலினத்தவரை அனுசரித்து செல்லவும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் உறுதியாகும். தடைபட்ட வெளிநாட்டு பயணம் உறுதியாகும். இஷ்ட தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும்.

    பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும் சிவராத்திரியன்று நெல்லிக்காய் சாறு அபிசேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை

    16.2.2025 முதல் 22.2.2025 வரை

    புதிய வாய்ப்புகள் கைகூடும் வாரம். ராசியில் சூரியன், புதன், சனி சேர்க்கை. முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட கூட்டு தொழில் ஆர்வம் உருவாகும்.

    அரசு உத்தியோகத்திற்கு நல்ல செய்தி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும். புதிய சொத்துகள் வாங்கும் போது முறையான பத்திரப் பதிவுவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள் 17.2.2025 அன்று மாலை 6.02 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்துபவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். குல தெய்வ வழிபாடு நற்பலன் தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை

    9.2.2025 முதல் 15.2.2025 வரை

    தடை, தாமதங்கள் அகலும் வாரம். ராசியில் சூரியன், சனி சேர்க்கை. தன ஸ்தானத்தில் உச்ச சுக்ரன்.ஜென்மச்சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும். பல்வேறு விதமான புண்ணிய பலன்கள் தேடி வரும்.அன்றாட செயல்களில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குல தெய்வ அனுகிரகத்தால் தடுமாற்றங்கள் அகன்று எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் திறமைகள் மிளிரும்.

    தொழிலுக்கு வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.நிலையான வருமானம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும்.புத்திர பிராப்த்தம் உண்டாகும். இந்த வாரத்தில் வீட்டுக்கடன், தொழில் விரிவாக்க கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.15.2.2025 அன்று காலை 5.44 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்ப உறுப்பினர்களில் எண்ணம் அறிந்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உணவு சார்ந்த விசயத்தில் கவனம் தேவை. தைப்பூசத்தன்று கரும்புச்சாறால் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை

    2.2.2025 முதல் 8.2.2025 வரை

    பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சனி பகவான் இன்னும் சில வாரங்களில் தன ஸ்தானம் செல்லப்போகிறார்.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் முன்னேற்றங்கள் அதிகமாக இருக்கும்.பொருளாதாரம் உயரும். கடன்களை படிப்படியாக குறைப்பதில் தீவிரம் காட்டு வீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும்.உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் கைகூடும். உடல் நலன்களின் முன்னேற்றம் இருக்கும்.கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும். பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். உங்கள் திறமையால் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

    பெண்களுக்கு உடன் பிறப்புகளின் உதவியும் தாய் வழி ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். வட்டியில்லா கடன் கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் சீராகும்.சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.வீண் அலைச்சல்கள், விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நவகிரகங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை

    26.1.2025 முதல் 1.2.2025 வரை

    சங்கடங்கள் விலகும் வாரம். தன, லாப அதிபதி குரு பகவான் 4.9-ம் அதிபதி சுக்ரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஜென்ம ராசியை விட்டு சனி பகவான் அகல்வதால் முட்டுக்கட்டைகள் அகலும். உங்கள் மனதில் உதயமாகும் திட்டங்கள் செயல் வடிவம் பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.உங்கள் மேல் விழுந்த வீண் பழியில் இருந்து விடுபடுவீர்கள்.எதையும் எதிர்கொள்ளும் துணிவும் மன தைரியமும் அதிகரிக்கும். மனபலம், தேகபலம் கூடும். அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, பினாமி சொத்து போன்ற எதிர்பாராத வரவு ஏற்படும். சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள்.

    சொந்தங்களால் ஏற்பட்ட மனச்சுமை குறையும். மாமனார் மூலம் பணம் அல்லது சொத்து கிடைக்கும். தடைபட்ட பத்திர பதிவு நடக்கும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். உங்கள் செயல்பாட்டில் மற்றவர்கள் குறுக்கீடு இருக்காது. பற்றாக்குறை வருமானக் குறைபாடு விலகி உபரி வருமானம் உண்டாகும். தொழிலில் அபி விருத்தியாகி பொருளாதார நிலை உயரும். கடன் சுமை குறையும். திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும்.தை அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை

    19.1.2025 முதல் 25.1.2025 வரை

    கடமைகள் நிறைவேறும் வாரம். ராசியில் சனி சுக்ரன் சேர்க்கை. குடும்பத்தாரின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வந்து சேரும். புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். கை மறதியாக வைத்த நகை, பொருள், முக்கிய ஆவ ணங்கள் தென்படும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.

    ஏழரைச் சனியின் காலம் என்பதால் குறுக்கு வழியில் வருமானம் ஈட்டுவது, தவறான நட்பு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். ஜென்மச் சனியின் தாக்கத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பீர்கள். 21.1.2025 அன்று 10.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.பேச்சில் பய உணர்வும், இயலாமையும் வெளிப்படும். சிந்திக்கும் திறன் குறையும். நவகிரகங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும் வாரம். ராசி அதிபதி சனியுடன் 4, 9-ம் அதிபதியாகிய சுக்ரன் சேர்க்கை. எத்தகைய சூழலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஜென்மச் சனி முடிவுக்கு வரப் போவதால் திருமணத்தடை அகலும்.

    சிலருக்கு பெற்றோரின் சம்மதத்துடன் விருப்பத் திருமணம் நடக்கும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வீண் செலவுகள், விரயங்கள் குறையும். மலைபோல் வந்த பிரச்சனைகள் பனி போல் விலகும். புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×