என் மலர்tooltip icon

    கும்பம் - வார பலன்கள்

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

    5.1.2025 முதல் 11.1.2025 வரை

    அனுபவித்த எண்ணிலடங்கா துயரம் தீரும் வாரம். ராசியில் சனி, சுக்ரன் சேர்க்கை செவ்வாய் பார்வையில் ஏற்பட்டுள்ளது. லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை என கிரக சஞ்சாரம் கும்பத்திற்கு சாதகமாக உள்ளது. இதுவரை ஜென்ம ராசியில் நின்ற ராசி அதிபதி சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை நோக்கி நகர்கிறார். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும்.

    சொந்த இன, உறவுகளில் வரன் அமையும்.சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லை குறையும். வர வேண்டிய பணம் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை செலுத்த முடியும். வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். பெண்கள் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆக மொத்தத்தில் இந்த வாரம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.கோ பூஜை செய்ய நன்மைகள் கூடும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை

    29.12.2024 முதல் 4.1.2025 வரை

    முயற்சிகள் பலிதமாகும் வாரம். ராசியில் உள்ள ராசி அதிபதி சனியுடன் 4,9-ம் அதிபதி சுக்ரன் செவ்வாய் பார்வையில் சேர்க்கை ஏற்பட்டுள்ளது.தாய், தந்தையின் ஆதரவு முன்னேற்றத்திற்கு ஒத்து ழைப்பு தரும். மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கும். திதி தர்ப்பணங்கள் மூலம் பாக்கிய பலன்களை அதிகரிக்க உகந்த காலம். அரசாங் கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும்.

    குறிப்பாக மருத்துவத் துறை படிப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும். பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்..சிலருக்கு கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.அனுமன் ஜெயந்தியன்று ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

    22.12.2024 முதல் 28.12.2024 வரை

    சுமாரான வாரம்.ராசிக்கும், ராசி அதிபதி சனிக்கும் செவ்வாயின் 8ம் பார்வை பதிவதால் நன்மையும், தீமையும் கலந்தே நடக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வேலை, தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு செல்லலாம். பொருளாதார பற்றாக் குறையை சமன் செய்ய எளிதான இ.எம்.ஐ. முறையில் கடன் வசதி கிடைக்கும். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடனும் கிடைக்கும்.

    கணவன்,மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தாய், தந்தையின் ஆதரவு உண்டு. பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சில விசயங்கள் தொடக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல் நிதானமாக செயல்பட்டால் அதிக நன்மையடையலாம். 22.12.2024 அன்று பகல் 12.55 மணி முதல் 25.12.2024 அன்று 1.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். காரிய சித்தி பெற கால பைரவரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

    15.12.2024 முதல் 21.12.2024 வரை

    லாபகரமான வாரம். ராசிக்கு 7-ம் அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.பங்குதாரர் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நவீன ஆடம்பர பொருட்கள், வீடு, வாகன யோகம் ஏற்படும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும்.

    தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடு பிடிக்கும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் மிகுதியாகும். குடும்பத்தினருடன் பேசி திருமணத்தை முடிவு செய்யலாம். மாற்று முறை வைத்தியத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஐயப்பனுக்கு துளசி சாற்றி வணங்க மனச் சுமை குறைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

    8.12.2024 முதல் 14.12.2024 வரை

    வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். வெகு விரைவில் ஜென்மச் சனியிலிருந்து முழுமையாக விடுதலை.ராசியில் உள்ள சனி பகவானுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் பெற்ற செவ்வாயின் 8ம் பார்வை பதிகிறது. அனுபவப்பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையில் இருந்து விடுபடுவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும்.

    நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும்.கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

    1.12.2024 முதல் 7.12.2024 வரை

    விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம்.ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையத் துவங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். அனைத்து வேலையிலும் சிறிய முயற்சியிலேயே நன்மைகள் கிடைக்கும். தடைகளை தகர்த்து வெற்றிநடை போடுவீர்கள். உடலிலும் உள்ளத்திலும் புதிய தெம்பு, தைரியம் குடி புகும். தொழிலில் நிலவி வந்த தேக்க நிலை அடியோடு மாறி நிறைவான லாபம் காண்பீர்கள். கையில் காசு சரளமாக புரளும்.

    இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விற்காமல் தேங்கிய சரக்குகள், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனையாகும்.உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம். நீங்கள் விரும்பிய அப்பார்ட்மென்டில் விரும்பிய வீடு கிடைக்கும். திருமண முயற்சி கைகூடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்சன் குறையும். சனிக்கிழமை ராகு வேளையில் கால பைரவரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

    24.11.2024 முதல் 30.11.2024 வரை

    தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் 4, 9ம் அதிபதி சுக்ரன் சஞ்சரிப்பதால் லாபம் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். ஆரோக்கிய குறைபாடு அகலும். குடும்பம் குதூகலமாக இருக்கும்.

    பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். பொழுது போக்கான விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும். 25.11.2024 அன்று அதிகாலை 5.02 முதல் 27.11.2024 அன்று மாலை 6.07 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் சிலருக்கு எதிர்மறை சிந்தனை மிகுதியாகும்.. குடும்பத்தினரின் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். மிகப் பெரிய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முக்கிய வழக்குகளை ஒத்தி வைக்கவும். சிவசக்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை

    17.11.2024 முதல் 23.11.2024 வரை

    தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வாரம். 2,11-ம் அதிபதி குரு 4,9-ம் அதிபதி சுக்ரனுடன் பரிவர்த்தனை செய்வதால் அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் ஏற்படும் போட்டி பொறாமைகளை சமாளிக்கப் பழக வேண்டும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். வேலையில் இருப்பவர்க ளுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

    சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுப்பதை வாங்குவதை தவிர்க்கவும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

    மாற்றங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி சனி வக்ர நிவர்த்தி ஆவதோடு தன லாப அதிபதி குரு 4, 9-ம் அதிபதி சுக்ரனுடன் பரிவர்த்தனை செய்வது என முக்கிய கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளது. தொழில் ரீதியான முன்னேற்றமும் இருக்கும். நிலையான வருமானம் உண்டாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் உண்டாகும். வீடு, நிலம், தோட்டம் வாங்கும் அமைப்பும் உருவாகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.தடைபட்ட சொத்து விற்பனை தற்போது நடந்து முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியதை முறையாக பிரித்து கொடுப்பீர்கள்.

    தாய்வழி உறவு களால் ஏற்பட்ட மனஸ்தாபம் தாய்மாமனின் அனுசரனையால் சீராகும். சிலருக்கு வெளிநாட்டு வேலையை விட்டுவிடும் எண்ணம் தோன்றும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்றமான நேரம். பங்குச் சந்தை ஆர்வலர்கள் ஒரே கம்பெனியின் பங்குகளை வாங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சி கைகூடும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். பவுர்ணமியன்று அன்னதானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை

    3.11.2024 முதல் 9.11.2024 வரை

    தேவைகள் நிறைவேறும் வாரம். தொழில் ஸ்தானத்தில் புதன். லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும்.

    கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையத் துவங்கும்.மனதிற்கு பிடித்த வரன் அமையும்.தங்கம் வாங்குவீர்கள். குடும்பத்தி னரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.கணவன் மனைவி மோதல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீண் அலைச்சல் தூக்கமின்மை விலகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை

    27.10.2024 முதல் 3.11.2024 வரை

    மிக மிக சாதகமான வாரம். ராசிக்கு 10-ம் மிடமான தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் குரு பார்வையில் சஞ்சாரம் .ராஜயோகம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.மனதிற்கு பிடித்த வரன் அமையும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

    உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். ராசி அதிபதி சனியின் மேல் செவ்வாயின் 8ம் பார்வை பதிவதால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். 28.10.2024 அன்று இரவு 10.30 முதல் 31.10.2024 இரவு 11.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகமான அலைச்சல், பெற்றோர் மீது அதிருப்தி, பழகிய வட்டாரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும். நவகிரகங்களையும் வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    புதிய திட்டங்கள், முயற்சிகள் செயல் வடிவம் பெறும். வாரம்.ராசிக்கு 3,10-ம் அதிபதி செவ்வாயின் 8-ம் பார்வை இருப்பதால் நினைத்தது நிறைவேறி நிம்மதி பிறக்கும். உங்கள் அறிவாற்றல் அதிகரிக்கும். இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் பெறலாம். வேலையில், தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் உண்டாகும். பதவி உயர்வு தேடி வரும்.குடும்ப பிரச்சனைகள் குறையும்.உறவுக ளிடம் நிலவிய பகை மறையும். தாய் வழிச் சொத்துப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.திருமண முயற்சி கைகூடும்.

    பொது வாழ்வில் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். நீண்ட நாளாக நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்கு தீபாவளி விடுமுறையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சென்று வர திட்டமிடுவீர்கள். வழக்குகள் சாதக மாகும். சனிப் பெயர்ச்சிக்கு பிறகு பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். சுப விஷேங்கள் நடக்கும். காவல் தெய்வங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×