என் மலர்
கும்பம் - வார பலன்கள்
கும்பம் - Kumbam
வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
சுமாரான வாரம். தன லாப அதிபதி குரு வக்ரம். அடைவதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார்கள். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் மேன்மையான பலன்களை பெற முடியும். சொத்து வாங்குவது, விற்பது போன்ற பெரிய பணம் தொடர்பான முக்கிய முடிவுகளை குரு வக்ர நிவர்த்தி வரை ஒத்திப் போடவும். ராசிக்கு பத்தில் சுக்ரன் குருப் பார்வையில் இருப்பதால் முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையான புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். அதன் மூலம் நல்ல வருவாயும் கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
பெண்களுக்கு தீபாவளிக்கு தாய் வீட்டுச் சீரும் அழைப்பும் வரும்.சாலையோர வியாபாரிகளுக்கு முதலீடு இரட்டிப்பு பலன் தரும். பணம் பைகளில், கைகளில் நிரம்பி வழியும். சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள். ஜென்மச் சனியால் சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். குல தெய்வ வழிபாடு அவசியம்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை
6.10.2024 முதல் 12.10.2024 வரை
அதிர்ஷ்ட தேவதை அரவணைக்கும் வாரம். பாக்கிய அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி செய்வதால் இது சுப பலனை இரட்டிப்பாக வழங்கப் போகும் வாரமாகும். முட்டுக் கட்டையாக இருந்த தடைகளை தாண்டி வாழ்க்கையை மேம் படுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் அரிய காரியங்களை செய்வீர்கள். எடுக்கப்பட்ட தொழில், உத்தியோக முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. சிலருக்கு தொழிலை மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும்.
மனதை மகிழ்விக்கும் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கோவில் கட்டும் பாக்கியம், பொதுக் காரியங்களுக்கு உதவுவது.ஆலய தரிசனமும் ஆதாயம் அதிகரிக்கும். வீடுகட்டும் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். திருமணத்திற்கு நல்ல வரன் தேடிவரும். வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)
29.9.2024 முதல் 5.10.2024 வரை
அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி பெறும் வாரம். பாக்கிய அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். மனதில் உதயமாகும் திட்டங்கள் செயல் வடிவம் பெறும். வழக்குகளில் வெற்றி உண்டு. தந்தை மற்றும் மூத்த சகோதரத்தால் ஆதாயம் கிடைக்கப்பெறும். சொந்தங்களால் ஏற்பட்ட மனச்சுமை குறையும். பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் எண்ணம் உதயமாகும். வாடகைக்கு போகாமல் இருந்த சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள்.
சொத்திற்கு முழுத்தொகையும் செலுத்தி தடைபட்ட பத்திர பதிவு இந்த வாரத்தில் முடிந்து விடும். இதுவரை தொழில், வேலைக்காக குடும்பத்தை பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். திருமணத் தடை அகன்று விரும்பிய வரன் வந்து சேரும்.நன்மைகள் பெருகும். உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட பொருள் வரவிற்கு வாய்ப்புகள் உள்ளது. 1.10.2024 அன்று மாலை 4.02 முதல் 4.10.2024 அன்று காலை 5.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும்.அமாவாைசையன்று பசுவிற்கு பச்சரிசி, வெல்லம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)
22.9.2024 முதல் 28.9.2024 வரை
காரிய சித்தி உண்டாகும் இன்பமான வாரம்.பாக்கிய அதிபதி சுக்ரன் ஆட்சி செய்வதால் திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். குலத்தொழில் பாகப்பிரிவினை சுமூகமாகும். பரம்பரை தொழிலின் முழுப்பொறுப்பும் வந்து சேரும். தன வரவில் தன் நிறைவு உண்டாகும். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரும். விரும்பிய உத்தியோக மாற்றம் தேடி வரும்.பங்கு வர்த்தகத்தில் நன்மை, தீமை கலந்து இருக்கும். வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும்.
வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். திருமணப் பேச்சு வார்த்தை மன நிறைவு தரும். பெண்களுக்கு சரளமான பண புழக்கம் இருக்கும்.கொடுத்த கடன் திரும்பி வரும்.பாக்கிகள் வசூலாகும் .செயற்கை கருத்தரிப்பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்கவும். எதிரிகள் தொல்லை குறையும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். இட்லி, எள்ளுச் சட்னி தானம் தரவும்.முன்னோர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
அமைதியான வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் ஆட்சியுடன் ராசியை புதன் பார்ப்பதால் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம், வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத பணவரவுகள் ஏற்படும்.புதிய வாகன யோகம் அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். இடைவிடாத தெய்வப் பிரார்த்தனைவார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)யால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நிச்சயிக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். இரக்க குணத்தால் தான தர்மங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் வாழும் மகள் வீட்டிற்குச் சென்று வருவார்கள். ஜென்மச் சனியின் காலம் என்பதால் செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். உறவினர் பகை அகலும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் விரும்பி வந்து சேருவார்கள். பெண்களுக்கு தாய் மற்றும் சகோதர வழி அன்பு ஆறுதலாக இருக்கும். ஆரோக்கிய கேடு சீராகும். முன்னோர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை
புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு, ராசி அதிபதி சனிக்கு சூரியன், புதன் பார்வை.ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். வீடு, வாகனம் போன்ற சுப விரயம் மிகுதியாகும்.
சுப செலவுகளுக்கு சகோதர சகோதரி, பெற்றோரிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் நலனில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்தில் குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும்.
உங்களை வாட்டிய கடன் பிரச்சனை மற்றும் வாழ்க்கைத் துணையின் பிரச்சனை தீரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சனைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்ளுவதால் ஊடல் கூடலாகும். நாளும் சுப பலன்களை அதிகரிக்க, தினமும் பிரதோஷ வேளையில் சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)
1.9.2024 முதல் 7.9.2024 வரை
சகாயமான வாரம். ராசிக்கும் ராசி அதிபதி சனிக்கு சூரியன் பார்வை. நினைப்பதை சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை கூட்டும். மனைவி வழி சொத்தில் நிலவிய கருத்து வேறுபாடு, பகைமை மறைந்து முழு பங்கும் கிடைக்கும்.
செலவுகளை குறைத்து சேமிப்பில் அதிக அதிக கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்கள் கல்வி அல்லது விளையாட்டு தொடர்பாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சியில் சாதகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி நிச்சயம். 4.9.2024 அன்று காலை 9.55 மணி முதல் 6.9.2024 இரவு 11 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.கரும்புச்சாறு அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
முயற்சி நிறைந்த வாரம். முயற்சி ஸ்தான அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களின் திட்டமிடுதல் மற்றும் செயல்படும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நல்ல சாதனை படைக்கலாம். முயற்சிக்கான பலன் உடனே கிடைக்கும். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும். கை மறதியாக வைத்த பொருள், காணாமல் போன நகைகள், முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுதிறன் மேம்படும். உறவுகளின் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும்.கண், காது, மூக்கு மற்றும் சுவாச உறுப்புகள் தொடர்பான பிரச்சனைகள் மாற்று மருத்துவத்தில் குணமாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அசையா சொத்துக்களில் ஈர்ப்பு உண்டாகும். வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் மேம்படும். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். பட்சணங்கள் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)
19.8.2024 முதல் 25.8.2024 வரை
திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் வாரம். 2, 11-ம் அதிபதி குரு சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் உண்டு. பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். நிலையான, நிரந்தரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். லாபத்தை அதிகரிக்க புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த சில முயற்சிகள் முடிவிற்கு வரும்.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் மூலம் சொத்து தகராறு, கருத்து வேறுபாடு போன்றவற்றை சந்திக்க நேரும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும்.சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுபகாரியச் செய்திகளால் சுபசெலவுகள் அதிகரிக்கும். ஒரிரு வாரங்களில் விரயங்கள் குறையும். நல்ல ஆன்மிக குரு கிடைக்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)
12.8.2024 முதல் 18.8.2024 வரை
சிறப்பான வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு சூரியன், புதன்,சுக்ரன் பார்வை. தோற்றப் பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வருமான உயர்வால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வீடு கட்ட, கார் வாங்க முயற்சிப்பீர்கள். நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். குடும்ப நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள்.
வெளிநாட்டு ஒப்பந்தங்களை குறித்த நேரத்தில் முடித்து கொடுப்பீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. வேலையில் சிறிய மன அழுத்தம் மற்றும் டென்சன் ஏற்படலாம். பிறர் சொல்வதைக் கேட்டு மனதை குழப்பாமல் இருப்பது நல்லது. எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் வெற்றி உண்டாகும். கைபேசியை கவனமாக கையாளவும். சிலருக்கு திருமண வாழ்க்கை மன நிம்மதியை கூட்டும். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வர லட்சுமி நோன்பு அன்று சுமங்கலி பூஜை நடத்தவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)
5.8.2024 முதல் 11.8.2024 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் வக்ர சனி, புதன் மற்றும் சுக்ரன் பார்வையில் உள்ளது. பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். கணவன், மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். சனி புதன், சனி சுக்ரன் சம்பந்தம் இருப்பதால் வாழ்க்கை துணையுடன் தர்க்கம் செய்யாமல் இருப்பது நல்லது.
கூட்டுத் தொழிலில் ஜாமீன், கடன் பெறுவது, கடன் கொடுப்பது என எதையும் யோசிக்காமல் முடிவெடுத்தால் அது விவகாரத்தில் முடியும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்றமான நேரம். சிலர் புதியாக ரியல் எஸ்டேட் தொழில் ஆரம்பிப்பார்கள். சில ஆண்கள் வாழ்க்கை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு தருவார்கள். 8.8.2024 அன்று அதிகாலை 3.15 மணி முதல் 10.8.2024 அன்று மாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை. ஆடிப் பூரத்தன்று அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
சாதகமான வாரம். ராசிக்கு புதன், சுக்ரன் பார்வை. வார ஆரம்பத்தில் பல நல்ல விஷயங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. சமூகத்தில் நன்மதிப்பு பெறவும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறவும் சாத்தியமான வாரமாக இருக்கும். ஆடித் தள்ளுபடியில் ஆடை ஆபரணம் வாங்க வாய்ப்பு உள்ளது. தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். உயர்கல்விக்கு விரும்பிய கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கும். சகோதரர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும்.நிச்சயித்த திருமணத்தை தள்ளிப்போடாமல் ஆவணியில் உடனே நடத்துவது நல்லது.மேலதிகாரியின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
பெற்றோர்கள் தங்கள் பிரச்சினையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ராசிக்கு புதன், சனி சம்பந்தம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.சிறு தடுமாற்றத்திற்கு பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும். துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயல வேண்டும். அம்மன் கோவிலில் உலவாரப் பணிகளில் ஈடுபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






