கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-02-05 03:21 GMT   |   Update On 2024-02-05 03:22 GMT

5.2.2024 முதல் 11.2.2024 வரை

மறைமுக எதிர்ப்புகள் விலகும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் உச்சம். புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில தொழில் வாய்ப்புகள் கைகூடும். முயற்சிகள் அனைத்தும் லாபமாக மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் உண்டாகும் மனைவி மூலம் திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது.

புதிய சொத்து பொன், பொருள் சேர்க்கை மனதை மகிழ்விக்கும். தாய் வழியில் மனக்கவலை, கருத்து வேறுபாடுகள் அகலும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறக்கும். கைகால் வலி, உடல் அலுப்பு குறையும். பரம்பரை நோய்கள் வைத்தியத்தில் சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட மனபாரம் சீராகும். தை அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News