கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-29 04:08 GMT   |   Update On 2024-01-29 04:09 GMT

29.1.2024 முதல் 4.2.2024 வரை

கலை ஆர்வம் மிகுந்த வாரம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் வரலாற்று சிறப்பு மிக்க புராதன பொருட்கள்,கலை சார்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். குடும்ப உறுப்பினர்கள் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். போட்டி களில் பங்கேற்று பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணம், புத்திர பிராப்த்தம் போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். 30.1.2024 அன்று 1.44 காலை முதல் 1.2.2024 பகல் 2.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றும். பண விசயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News