கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-22 03:53 GMT   |   Update On 2024-01-22 03:54 GMT

22.1.2024 முதல் 28.1.2024 வரை

மேன்மையான எண்ணங்கள் உருவாகும் வாரம்.ஜென்மச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது. 2,11-ம் அதிபதி குரு 3,10-ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும். புதிய வேலையாட்கள் அமைவார்கள். நிரந்தர வேலை கிடைக்கும். சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும்.

ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் அதிகரிக்கும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை.27.1.2024 பகல் 1.01 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அண்டை அயலாருடன் அனுசரித்துச் செல்லவும். தைப்பூசத்தன்று வள்ளலார் வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News