கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-08 04:20 GMT   |   Update On 2024-01-08 04:21 GMT

8.1.2024 முதல் 14.1.2024 வரை

விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். 7-ம் அதிபதி சூரியன் ராசிக்கு 11ல் நிற்பதால் கூட்டுத் தொழில் வியாபார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி நிம்மதி ஏற்படும்.ஜென்மச் சனி என்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம். எதிர்பாராத தனச் சேர்க்கையால் கடந்த கால இழப்புகள் இருந்த இடம் தெரியாது.பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள். புதிய பாலிசி எடுப்பீர்கள். புதிய நகைச் சீட்டு போடலாம். தந்தைக்கு கண், இருதயம் தொடர்பான சிகிச்சை செய்ய நேரும்.

உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் வெற்றி உண்டாகும். புதிய உயர்ரக செல்போன் வாங்குவதல், போனில் நெட்ஒர்க் மாற்றுதல் போன்றவைகள் நடக்கும். தாய்மாமன் அனுசரனை உண்டு. சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News