கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-02 03:55 GMT   |   Update On 2024-01-02 03:56 GMT

1.1.2024 முதல் 7.1.2024 வரை

முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். தொழில் திறமைகள் மிளிரும். தொழிலுக்கு வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலால் ஆதாயம் உண்டு. அரசாங்க, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.சிலர் பார்க்கும் வேலையில் நிலவும் அசவுகரியத்தால் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். தொழிலா ளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று மன நிம்மதியை அதிகரிப்பீர்கள். கடன் பிரச்சினையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.

பணம் கிடைக்கிறது என்பதற்காக தொழிலில் அதிக முதலீடு செய்யக் கூடாது. நேரத்திற்கு சாப்பிட்டு ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.2.1.2024 மாலை 6.30 முதல் 5.1.2024 காலை 6.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் கொடுக்கல், வாங்கல்களையும் தவிர்க்கவும். அமாவாசையன்று பெற்றோர், பெரியோர்களின் நல்லாசி பெறவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News