கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-25 04:22 GMT   |   Update On 2023-12-25 04:23 GMT

25.12.2023 முதல் 31.12.2023 வரை

தொட்டது துலங்கும் வாரம். 3-ம்மிட குருவால் எடுத்த காரியத்தில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். ஞாபக சக்தி கூடி செயல்திறன் அதிகரிக்கும். தெளிவான பேச்சு, தைரியமான செயல்பாடுகள், பண்பான நடவ டிக்கைகள் இவை அனைத்தும் சமுதாயத்திற்கு உங்களை அடையாளம் காட்டும். வெளியுலகத்திற்குத் தெரியாமல் இருந்த உங்களின் திறமைகள் வெளிவரும்.சிலர் தொழிலை, தொழில் முறையை மாற்றுவார்கள். வீடு அல்லது வேலையில் இடமாற்றம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்களுக்கு உங்கள் மேல் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர, சகோதரி களின் சண்டைகள் மறந்து அன்பாக மலரும். தந்தை ஸ்தானத்தில் நின்று அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள்.மாமனாருடன் புரிதல் ஏற்படும்.

சிலருக்கு மாமனார் மூலம் பெரும் பொருள், பணம், தங்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தங்க நகைகள் வாங்கி அணிந்து மகிழும் யோகம் கிடைக்கும். காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகள் குணமாகும். திருமண முயற்சிகள் இழுபறியாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News