கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-11 05:16 GMT   |   Update On 2023-12-11 05:17 GMT

11.12.2023 முதல் 17.12.2023 வரை

கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி, 4,9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி.முயற்சி ஸ்தான அதிபதி , தொழில் ஸ்தான அதிபதி பலம் பெறுவதால் தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும்.திட்டமிட்டு செயல்படுவீர்கள். செல்வாக்கு சொல்வாக்கு உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் இல்லாத செயலைச் செய்யமாட்டீர்கள். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். வியாபாரம் அமோகமாக நடக்கும்.கையிருப்பு கணிசமாக உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.

படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு.அசையும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள்.விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மானியத்துடன் கடன் கிடைக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு மேலதி காரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் நீங்கும். அமாவாசையன்று சித்தர்களை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News