கும்பம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-12-06 03:44 GMT   |   Update On 2023-12-06 03:44 GMT

4.12.2023 முதல் 10.12.2023 வரை

நேர்மறை ஆற்றல் பெருகும் வாரம். ராசி மற்றும் ராசி அதிபதி சனியை 3,10ம் அதிபதி செவ்வாய் பார்ப்பதால் கடந்த கால இழப்புகளால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் மறையும் நேரம் வந்துவிட்டது. பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். தன, லாப ஸ்தான அதிபதி குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். நல்ல சொந்த வீட்டிற்குச்செல்வீர்கள்.

கவுரவப் பதவிகள் கிடைக்கும்.உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சாதகமாக உள்ளது. தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும்.6.12.2023 காலை 10.20 மணி முதல் 8.12.2023 இரவு 9.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். விநாயகரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News