ஆன்மிக களஞ்சியம்

விரதத்திலே உயர்ந்த விரதம்

Published On 2024-04-01 11:11 GMT   |   Update On 2024-04-01 11:11 GMT
  • பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதிக்கு உரியது.
  • அமாவாசையில் இருந்து ஆரம்பித்து பவுர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள்.

ஆதி திருவரங்கம் ரங்கநாதர் பெருமாள் ஆலயத்தில் ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு செய்யப்படும் பூஜைகளை பார்த்து தரிசிக்க நீண்ட தூரத்தில் இருந்து எல்லாம் பக்தர்கள் வருகிறார்கள்.

அந்த அளவுக்கு இந்த தலத்தின் ஏகாதசி பூஜை சிறப்பு பெற்றுள்ளது.

எனவே ஏகாதசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏகாதசியை விட உயர்ந்த விரதம் வேறு ஏதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

எந்த நிலையிலும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதிக்கு உரியது.

அமாவாசையில் இருந்து ஆரம்பித்து பவுர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள்.

இது சுக்ல பட்சம் எனப்படும். பவுர்ணமியில் இருந்து ஆரம்பித்து அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள்.

இது கிருஷ்ண பட்சம் எனப்படும்.

இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளில் வரும் திதி ஏகாதசி திதி.

ஏகம்+தசம்= அதாவது 1+10=11 என்பதுதான் ஏகாதசி திதி. 

Tags:    

Similar News