ஆன்மிக களஞ்சியம்

சௌபாக்கிய பைரவ எந்திர வடிவம்

Published On 2024-04-13 11:09 GMT   |   Update On 2024-04-13 11:09 GMT
  • நான்கு திக்குகளிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணிபைரவர், ஒளஷ பைரவர் எனும் நான்கு பைரவர்கள் அமர்ந்துள்ளனர்.
  • அதனுள் இருக்கும் வீதிகளில் கடல், மலை ஆகாசத்தைக் குறிப்பன.

இவ்வாறு யோக பைரவரையும் அவரது உபதேவதைகளையும் வர்ணிக்கும் படியாக அமைந்திருப்பது தான் சௌபாக்ய பைரவ யந்திர வடிவம் ஆகிறது.

இதன் நடுவே நமக்கு உடன்பலன் தரக்கூடிய அஷ்ட பைரவர்கள் தளங்களிலும் பதினாறு இதழ்த் தாமரைகளில் 16 லட்சுமிகளும், சக்ர வானகிரி சப்த சாகரங்களில் தேவர்கள் வழிபடப்படுகிறார்கள்.

நான்கு புறங்களிலும் மூன்று வீதிகள் தனித்தனியாக உள்ளன.

நான்கு திக்குகளிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணிபைரவர், ஒளஷ பைரவர் எனும் நான்கு பைரவர்கள் அமர்ந்துள்ளனர்.

அதனுள் இருக்கும் வீதிகளில் கடல், மலை ஆகாசத்தைக் குறிப்பன.

இந்த அமைப்போடு கூடிய யோக பைரவச் சக்கரத்தை ஸ்தாபனம் செய்து வழிபடுபவன் இக்கலியுகத்தில் ஆபத்துகளிலிருந்து காக்கப்பட்டு தேவர்கள், ஆவரண தேவதைகளின் அருள்பெற்று சௌபாக்ய பைரவர் என்ற பெயருள்ள யோக பைரவ மூர்த்தியின் ஆசீர்வாதத்தினால் சகல உலக போகங்களையும் பெற்றிடுவார்.

இயற்கைச் சீற்றம், விலங்கு, பறவை, விஷப்பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்று பைரவ கல்டம் உரைக்கிறது.

யோக பைரவக் கோட்டை எனும் பைரவர் யந்திர வர்ணணையைப் படித்தாலே அவர் புண்ணியக்கதை படித்த பலனால் நலம் அடையலாம்.

Tags:    

Similar News