ஆன்மிக களஞ்சியம்

சிவனின் ஒன்பது அவதாரங்களில் பைரவர்

Published On 2024-04-13 10:57 GMT   |   Update On 2024-04-13 10:57 GMT
  • ஈசனின் அம்சங்களில் ஒருவரான ஸ்ரீபைரவ மூர்த்தியை சிவகணங்கன் வரிசையில் திருத்தலத்தின் காவலர் என்று புகழ்வார்கள்
  • பைரவரை வழிபட்டவர்கள் பல யோகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

பைரவர் என்றால் எல்லோருக்குமே அவர் ஒரு உக்ரமான தெய்வம் என்றும், நன்மை செய்வாரா மாட்டாரா என்றும் ஒருவித பயம் உண்டாகலாம்.

ஆனால் பைரவரை வழிபட்டவர்கள் பல யோகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

மக்களைக் காப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவங்களில மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வழிபடும் மூர்த்தங்களாக, ஒன்பது உள்ளன.

அவைதான் சிவலிங்கம், லிங்கோத்பவர், சந்திர சேகரர், சோமாஸ்கந்தர், பைரவர், வீரபத்திரர், நிருத்த மூர்த்தி, தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர் ஆகியோர்.

ஈசனின் அம்சங்களில் ஒருவரான ஸ்ரீபைரவ மூர்த்தியைச் சிவகணங்கன் வரிசையில் திருத்தலத்தின் காவலர் என்று புகழ்வார்கள்,

சிவாலயங்களில் அர்த்தசாம பூஜை முடிந்த பிறகு ஆலயத்தைப் பூட்டி சாவியை பைரவர் முன்பு வைத்து விட்டால் இரவு முழுவதும் பாதுகாப்பார்.

திருட்டுப் போகாது என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது.

Tags:    

Similar News