ஆன்மிக களஞ்சியம்

பித்ருகாரகன்

Published On 2024-02-19 12:57 GMT   |   Update On 2024-02-19 12:57 GMT
  • அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.
  • ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.

சூரியனின் வெப்பம் ஏறும் போதும் இறங்கும் போதும், நாம் படாதபாடுபடுகிறோம்.

நீரை உறிஞ்சுபவனும், மழையைப் பொழியச் செய்பவனும் அவனே.

இன்பத்தை அளிப்பதும் துன்பத்தைச் சுமக்க வைப்பதும் சூரியனே! இயற்கையின் சட்ட திட்டங்களில் இவனது பங்கு உண்டு.

இயற்கையில் தோன்றிய சாஸ்திரம், ஜோதிடம். ஆகவே அதற்கு அழிவில்லை.

பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும் போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும், சந்திரனையும் அப்படியே தோற்றி வைக்கிறார் கடவுள் என்கிறது வேதம்.

இனப் பெருக்கத்துக்கு காரணமான ராசி புருஷனின் ௫ ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம்.

தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந்தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு, சூரியனுக்கும் உண்டு, பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும்.

எனவே அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.

ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.

அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு.

Tags:    

Similar News