ஆன்மிக களஞ்சியம்

மும்மூர்த்தி தலம்

Published On 2024-02-26 11:32 GMT   |   Update On 2024-02-26 11:32 GMT
  • நாமக்கல் நகர், தமிழகத்தில் தொழிலில் சிறந்து விளங்கும் ஒப்பற்ற நகரமாகும்.
  • இந்நகருக்கு சுமார் 50 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல வகை உள்ளன.

நாமக்கல் நகர், தமிழகத்தில் தொழிலில் சிறந்து விளங்கும் ஒப்பற்ற நகரமாகும்.

இங்கு நகரின் நடுவே பெரிய ஒரே கல்லால் ஆன பாறை ஒன்றுள்ளது.

இப்பாறை சாளக்கிராமம் என்றும், இப்பாறையில் இருபுறமும் குடையப் பெற்ற, ஸ்ரீ நரசிம்மர், அரங்க நாதர் சன்னதிகளும், அரங்க நாயகி தாயார், நாமகிரி தாயார் என்ற புராணப் புகழ் பெற்ற புண்ணிய தலங்களும் உள்ளன.

பாரத துணை கண்டத்தின் தென் பகுதியில், தமிழ்நாட்டில், சேலம் மாவட் டத்தின் தெற்கு பகுதியில் உள்ள இந்நகர், முன் காலத்தில் நாமகிரி என்றும், தற்போது நாமக்கல் என்றும் விளங்குகிறது.

இது நகராட்சி எல்லைக்குட்பட்டது.

2 லட்சம் ஜனத்தொகை கொண்ட இந்நகரம் மழை வளம் உடையது. சுமார் 10 மைல் பரப்பளவில் அமைந்துள்ளது.

நகருக்கு மையத்தில் ஸ்ரீ சைல மலை, நாமகிரி, நாமக்கல் என்றெல்லாம் பெயர் கொண்டு ஒரே கல்லால் ஆன குன்று நகரின் நடுநாயகமாக திகழ்கிறது.

அப்பாறையை சுற்றி மூன்று புறத்தில், பச்சைகுளம், செட்டிமார்குளம், கமலாலயகுளம், கமலாலயம் என்ற புராணப் பிரசித்தி பெற்ற குடிநீர் குளங்கள் உள்ளது.

நாமக்கல் நகருக்கு சுமார் பத்து மைல் தொலைவில் புனிதமான காவிரி நதிபாய்கிறது. இந்நகரில் மிகவும் சக்திவாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ நாமக் கிரியம்மன் கோவில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறாள், தவிர பல அழகிய சிற்பங்களைக் கொண்டு சரித்திரப்பிரசித்தி பெற்ற குடவறைக் கோவில்களும் உள்ளன.

அங்கு ஸ்ரீ நரசிம்ம சாமி ஆலயம் ஒரு புறமும் மலையின் மறுபுறம்ஸ்ரீ அரங்க நாத சாமி ஆலயமும் மிகப்பிரசித்தி பெற்று விளங்கு கின்றன.

சுமார் 18 அடி உயரமுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடன் நிற்கும் திருக்கோவிலும் இருக்கிறது.

நாமக்கல்லில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் உள்ளதால் மும்மூர்த்தி தலம் என்ற பெருமை இந்நகருக்கு உண்டு.

இந்நகருக்கு சுமார் 50 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல வகை உள்ளன.

Tags:    

Similar News