ஆன்மிக களஞ்சியம்

இந்த பதினொன்றாம் திதிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?

Published On 2024-04-01 11:13 GMT   |   Update On 2024-04-01 11:13 GMT
  • ஓர் ஆண்டிற்கு இருபத்து நான்கு பட்சங்கள். இருபத்து நான்கு பட்சங்களுக்கு ஏகாதசிகள்.
  • ஆனால் சில ஆண்டுகளில் 24 வருடங்களுக்கு மேலும் சில நாட்கள் வரும்.

ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. அவ்வாறு ஏகாதசி திதிக்கு உரிய தேவதை தர்மம் ஆகும்.

அதனால் இந்த திதியை 'தர்மதிதி' என்றும் கூறுவது உண்டு.

எனவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை ஒருவர் தவறாது பின்பற்றினால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும்.

அதனால் விரதம் இருப்பவர்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவார்கள்.

கர்ம மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5,மனம்1 ஆகிய இந்தப் பதினொன்றாலும் செய்யப்படும் தீவினைகள், இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் அழியும்.

ஏற்கனவே செய்த தீவினைகள் அழிந்துவிடும்.

பெருமாளை வணங்குகிறோம் இனி தீவினைகள் செய்ய மாட்டோம் என்பதை அவ்வப்போது மறந்துவிடாமல் உறுதியுடன் இருக்க ஏகாதசி விரதம் முக்கியமானதாகும்.

ஓர் ஆண்டிற்கு இருபத்து நான்கு பட்சங்கள். இருபத்து நான்கு பட்சங்களுக்கு ஏகாதசிகள்.

ஆனால் சில ஆண்டுகளில் 24 வருடங்களுக்கு மேலும் சில நாட்கள் வரும்.

எனவே சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகள் வரும்.

இந்த ஏகாதசிகளின் வரிசை மார்கழி மாதம் தேய்பிறை பகுதியில் ஆரம்பித்து அடுத்து வரும் கார்த்திகை மாத வளர்பிறைப் பகுதியில் முடிவடைகிறது.

Tags:    

Similar News