ஆன்மிக களஞ்சியம்

பைரவரது ஆதிகால வழிபாடுகள்

Published On 2024-04-13 11:05 GMT   |   Update On 2024-04-13 11:05 GMT
  • வடநாட்டில் காபாலிகர்கன் என்ற வகையினரும், காணமுகர்கள் என்ற இரு பிரிவினர்கள் வாழ்ந்து வந்தனர்.
  • சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் பைரவ பூஜை சில ஆலயங்களில் மட்டுமே நடைபெற்றது.

வடநாட்டில் காபாலிகர்கன் என்ற வகையினரும், காணமுகர்கள் என்ற இரு பிரிவினர்கள் வாழ்ந்து வந்தனர்.

சில காலங்கள் கழித்து இந்தியாவின் தென்னகப் பகுதிக்குள் நுழைந்து, ருத்திர பூமி எனப்படும் சுடுகாட்டில் நுழைந்து இவர்களது வழிபாட்டுக் கடவுளான பைரவரை வணங்கி மது மாமிச வகைகளைப் படைத்து வைதீக சாஸ்திர வழிபாட்டாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தனர்.

இவைகளை ஈசனும் வெறுத்திட காபாலிகர்களும் கானமுகர்களும் அழிந்தனர்.

பல்லவர் ஆட்சிக்கால மக்கள் இவர்களை வெறுத்து விட்டாலும் பைரவர் பற்றிய பயம் போகாமல் இருந்தது.

சிவன் சொத்தை அபகரிப்பவர்களை பைரவர் தண்டிப்பார் என்ற நம்பிக்கை அப்போது நிலவியதால் பைரவர் பற்றிய பயம் குறையாத வேளையில் பைரவரின் 64 வடிவங்கள் பலன்கள் எடுத்துச் சொல்லப்பட்ட போது பெளத்தர்களும் சமணர்களுமே இவரை வழிபட்டனர்.

 சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் பைரவ பூஜை சில ஆலயங்களில் மட்டுமே நடைபெற்றது.

இன்றோ தேய்பிறை அஷ்டமி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷ கால நந்தி வழிபாடு போல பக்தர்கள் முன்னதாகவே ஆலய வழிபாட்டுக்குச் சென்று விடுகின்றனர்.

பைரவ வழிபாட்டுக்கு உதவியாக ஆகாச பைரவ கல்வம், ருத்ரயாமனம் போன்ற நூற்கள் இவரை முறையாக வழிபடும் விதியைச் சொல்கிறது.

Tags:    

Similar News