ஆன்மிக களஞ்சியம்

அரங்கன் புறப்பாடு

Published On 2023-12-21 11:54 GMT   |   Update On 2023-12-21 11:54 GMT
  • அரங்கன் புறப்பாடு என்றால் அது சாதாரணமல்ல!
  • தங்கக் குடை பிடித்து முன்னே பந்தம் செல்ல, வாத்திய முழக்கோடு எழுந்தருள்வார் பெருமான்.

பகல் பத்து உற்சவத்தின் ஒன்பது நாட்களிலும் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து அர்ஜூன மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார் நம்பெருமாள் (உற்சவர்).

அரங்கன் புறப்பாடு என்றால் அது சாதாரணமல்ல!

தங்கக் குடை பிடித்து முன்னே பந்தம் செல்ல, வாத்திய முழக்கோடு எழுந்தருள்வார் பெருமான்.

பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்கள் ஸ்ரீபாதம் தாங்குவார்.

திரையிட்டு அலங்காரங்கள் செய்து முடித்தவுடன், "அருளப்பாடு ஸ்ரீபாதம் தாங்குவார்" என்று குரல் ஒலிக்கும்,

ஸ்ரீபாதம் தாங்குவார் உள்ளே செல்ல, கதவுகள் மூடப்படும்.

பின், மீண்டும் கதவு திறக்கும்.

அகவிருள் நீக்கும் பேரொளிப் பிழம்பாய், அருளொளி துலங்க வெளிப்படுவார் அரங்கத்தமுதன்.

அர்ஜூன மண்டபத்தில் அரையர் சேவை, கோஷ்டி போன்றவை முடிந்ததும் இரவு 9 மணி அளவில் மீண்டும் மூலஸ்தானத்தை வந்தடைவார்.

ஒன்பது நாட்களும் இதே மாதிரி நடைபெறும்.

Tags:    

Similar News