ஆன்மிக களஞ்சியம்

அனைத்து ராசிகளிலும் நிறைந்திருக்கும் சூரியன்

Published On 2024-02-19 12:29 GMT   |   Update On 2024-02-19 12:29 GMT
  • எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.
  • ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.

சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன்னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான்.

எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.

மனசஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு. சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான்.

அவன்! "ஹோரா" என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சமபங்கில் நிறைந்திருப்பதாகச் சொல் கிறது ஜோதிடம்.

இந்த 2 பேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.

ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.

ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை.

ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது.

த்ரேக்காணம், ஸப்தமாச்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய ராசியின் உட்பிரிவுகளில் மற்ற கிரகங்களும் சேர்ந்திருக்கும்.

ஒவ்வொரு ராசியிலும் எல்லா கிரகங்களின் பங்கு இருக்கும்.

ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்ம வினைக்குத் தக்கபடி, நடைமுறைப்படுத்த வைக்கிறது.

Tags:    

Similar News