தொழில்நுட்பம்

அதிநவீன அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வெளியீடு

Published On 2019-05-08 05:26 GMT   |   Update On 2019-05-08 05:26 GMT
கூகுள் நிறுவனம் தனது IO2019 நிகழ்வில் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டிருக்கிறது. #IO2019



கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் கூகுள் சர்ச், கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் வழங்க இருக்கும் அம்சங்களை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் புதிய அம்சங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவ்வாறு டார்க் தீம், பில்ட்-இன் 5ஜி வசதி, ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோகஸ் மோட் உள்ளிட்டவை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

5ஜி மற்றும் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கான வசதி

ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் மடிக்கக்கூடிய சாதனங்களில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் முதல் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு கியூ இருக்கிறது. கூகுள் நிறுவனம் தனது டெவலப்பர்களுக்கு வேகமான கனெக்டிவிட்டி வழங்கவும், கேமிங் மற்றும் ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) அனுபவத்தை மேம்படுத்தும் டூல்களை வழங்குகிறது.



லைவ் கேப்ஷன் அம்சம்

கூகுள் அறிவித்திருக்கும் அடுத்த அம்சம் காது கேட்பதில் குறைபாடு கொண்டிருப்பவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. லைவ் கேப்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் ஒரு க்ளிக் செய்ததும், போனில் இயங்கும் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும். குரல் ஒலிக்கத் துவங்கியதும் கேப்ஷன்கள் தானாக திரையில் தோன்றும். இந்த அம்சம் வைபை அல்லது மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றில் இயங்கும்.

நோட்டிஃபிகேஷன்களுக்கு ஸ்மார்ட் ரிப்ளை

கூகுள் தனது புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய அம்சம் அனைத்து மெசேஜிங் செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷன்களுக்கு ரிப்ளை அனுப்ப பரிந்துரைக்கும்.



பிரத்யேக பிரைவசி பகுதி

ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் கூகுள் பிரத்யேக ‘பிரைவசி செக்‌ஷன்’ ஒன்றை செட்டிங்ஸ்-இல் கொண்டு வருகிறது. இது ஒற்றை இடத்தில் மிகமுக்கிய கண்ட்ரோல்களை இயக்க வழி செய்கிறது. லொகேஷன் டேட்டாவை இயக்க புதிதாக லொகேஷன் அம்சம் சேர்க்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எந்தெந்த செயலிகளுக்கு லொகேஷன் விவரங்களை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். 

ஃபோகஸ் மோட்

மொபைல் போனின் பயன்பாட்டை பயனர்கள் சிறப்பாக இயக்க ஏதுவாக கூகுள் ஃபோகஸ் மோட் அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் செயலிகளை தேர்வு செய்து அவற்றை சைலண்ட் மோடில் வைக்க முடியும். ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யாமலேயே செக்யூரிட்டி அப்டேட்களை பெறலாம்.



மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பில் இன்று முதல் 13 பிராண்டுகளை சேர்ந்த சுமார் 21 சாதனங்களில் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News