தொழில்நுட்பம்

இந்தியாவில் ரூ.1500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2019-05-03 04:22 GMT   |   Update On 2019-05-03 04:22 GMT
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. #Samsung



சாம்சங் நிறுவனம் மேம்பட்ட கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறிமுகமான கேலக்ஸி ஏ10, கேல்கஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களில் கேல்கஸி ஏ ஸ்மார்ட்போன் விலை அதிகபட்சமாக ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் விலை ரூ.500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.7,990 விலையிலும், கேலக்ஸி ஏ320 ஸ்மார்ட்போன் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.11,490 விலையிலும், கேலக்ஸி ஏ30 விலை ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.15,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோன்று அமேசானிலும் புதிய விலையிலேயே கேல்கஸி ஏ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ப்ளிப்கார்ட் தளத்தில் விரைவில் புதிய விலை மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற கேலக்ஸி ஏ மற்றும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சாம்சங் இதுவரை விலை குறைப்பு பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. அமேசான் தளத்தில் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் மே 4 ஆம் தேதி முதல் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018), கேலக்ஸி ஏ7 (2018), கேலக்ஸி ஜெ6 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டது.
Tags:    

Similar News