செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்

Published On 2019-05-18 00:30 GMT   |   Update On 2019-05-18 00:30 GMT
ஆஸ்திரேலியாவில் உணவுப்பொருட்களை பாதுகாப்பதில் விதிமுறைகளை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரின் தெற்கு வீதியில் ‘தி கரி கிளப் இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நிலிஷ் டோக்கே என்பவர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.

இந்த உணவகம் உணவுப்பொருட்களை பாதுகாப்பதிலும், தூய்மையான தரத்தில் உணவக வளாகத்தை பராமரிப்பதிலும் தவறியது உள்ளிட்ட 7 விதிமுறைகளை மீறி இருக்கிறது. சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு 25 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.12½ லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து உணவகத்தின் அதிபர் நிலிஷ் டோக்கே கூறுகையில், “ உணவகத்தில் சோதனை நடந்தபோது நான் இல்லை. இருப்பினும் மறுநாளே உணவகம் தூய்மைப்படுத்தப்பட்டு முழுமையான தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News