செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Published On 2019-04-23 07:50 GMT   |   Update On 2019-04-23 07:50 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. #Indianskilled #SriLankarblasts
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.



இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த திங்கள் அன்று தெரிவித்திருந்தார்.

இலங்கை குண்டுவெடிப்புகளில் 5 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் வேமுராய் துளசிராம், எஸ்.ஆர். நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா, எச். சிவக்குமார் என்றும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், மேலும் ஹெச்.மாரிகவுடா, ஹெச்.புட்டராஜா ஆகிய 2 இந்தியர்கள் பலியானதாக இன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  #Indianskilled #SriLankarblasts
Tags:    

Similar News