செய்திகள்

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-11-23 09:48 GMT   |   Update On 2018-11-23 09:48 GMT
முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்தது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர் வரத்து 1,093 கன அடியில் இருந்து 1,882 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன காரணமாக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 130.20 அடியாக உள்ளது. இன்றும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணை நீர் மட்டம் 62.89 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 800 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1310 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கனஅடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. 175 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 6.2, தேக்கடி 49, கூடலூர் 13, சண்முகா நதி அணை 14, உத்தமபாளையம் 16.4, வீரபாண்டி 4, கொடைக்கானல 6.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #PeriyarDam

Tags:    

Similar News