செய்திகள்

1 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகளை பாடாய்படுத்தும் செந்தூர் எக்ஸ்பிரஸ்

Published On 2018-11-10 12:47 GMT   |   Update On 2018-11-10 12:47 GMT
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஒரே இடத்தில் 1 மணி நேரம் நிறுத்தப்படுவதால் பயணிகளை பாடாய்படுத்துகிறது. #ChendurExpresstrain

மதுரை, நவ.10-

ஆன்மீக தலமான திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படுகிறது.

இந்த ரெயிலில் ஒருமுறை பயணம் செய்பவர்கள் மறு முறை பயணத்தை தொடர் வார்களா? என்றால் சந்தேகம் தான். அந்த அளவுக்கு பயணிகளின் பொறுமையை சோதித்து விடுகிறது செந்தூர் எக்ஸ்பிரஸ்.

திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு டிக்கெட் எடுப்ப வர்களின் நிலைமை தான் படுமோசமாகி விடுகிறது. 7 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் இந்த ரெயில் அட்டவணை நேரப்படி 11.40 மணிக்கு மதுரையை வந்தடைய வேண்டும்.

ஆனால் ஏதாவது ஒரு ஸ்டேசனில் 1 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்து விடுகின் றனர். இதனால் 12.40 மணிக்குத்தான் ரெயில் மதுரை வந்து சேருகிறது.

திருப்பரங்குன்றத்துக்கு இரவு 11.40 மணிக்கு வந்த ரெயில் அங்கு நிறுத்தப் பட்டது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் ரெயிலை எடுத்து விடுவார்கள். 12 மணிக்குள் மதுரைக்கு சென்று விடலாம் என நினைத்த பயணிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

1 மணி நேரமாக ரெயில் அங்கேயே நின்று கொண் டிருந்தது. 4 ரெயில்கள் அந்த வழியாக கடந்து சென்ற பின்னர் தான் செந்தூர் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. அதன் பின்னர் 12.55 மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது.

ஒரு நாள் மட்டும் இந்த நிலை இல்லை. தினமும் இதே நிலை தான் நீடிக்கிறது. ரெயில்வே நிர்வாகமும் இந்த பிரச்சினையை கண்டு கொண்டதாக தெரிய வில்லை.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மட்டுமல்ல பல எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. திருச்செந்தூர்-மதுரை இடையேயான தூரத்தை கடக்க செந்தூர் எக்ஸ்பிரஸ் 6 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

நடுக்காட்டில் ரெயில் நிறுத்தப்படுவதால் பயணிகளின் உடமைகள் பறிபோக வாய்ப்புள்ளது. ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். #ChendurExpresstrain 

Tags:    

Similar News