செய்திகள்

பந்துவீச்சில் தவறு செய்துவிட்டோம் - ரோகித் சர்மா ஒப்புதல்

Published On 2018-09-19 05:17 GMT   |   Update On 2018-09-19 05:17 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாங் காங்குக்கு எதிராக பந்துவீசுவதில் தவறு செய்துவிட்டதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvHK #RohitSharma
துபாய்:

துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆங்காங்கிடம் இந்தியா போராடி வெற்றி பெற்றது.

இந்தியா நிர்யணித்த 286 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஹாங் காங் அணியின் தொடக்க ஜோடியான நிஜா கட்கான் (92ரன்), அனத் மான்ராஜ் (73) 34.1 ஓவரில் 174 ரன் சேர்த்தது. அவர்கள் அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. ஆங்காங் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கத்துக்குட்டி அணியா ஹாங் காங்கை இந்திய பந்து வீச்சாளர்கள் எளிதாக சுருட்ட முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தது.

போராடி வென்றது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-


ஹாங் காங்குக்கு எதிரான போட்டி எளிதாக இருக்காது என்பதை அறிந்து இருந்தோம். இறுதியில் வெற்றி பெற்றது முக்கியமானது.

நாங்கள் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்குகினோம். ஆனால் அதை காரணம் காட்டக்கூடாது. பந்துவீச்சில் தவறு செய்துவிட்டோம்.

இன்னும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் (ஆங்காங்) வெற்றியை நோக்கி முன்னேறினர். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. கடைசி கட்டத்தில் நெருக்கடி சூழ்நிலையை கையாண்ட விதம் சிறப்பானது.

ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் விளையாடி விட்டு இங்குள்ள சூழ்நிலையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது அவ்வளவு எளிதானதல்ல.

அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் நல்ல பங்களிப்பு அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அற்புதமான வீரர். அவர் நல்ல தொடக்கத்தை தரவில்லை. ஆனால் அதன்பின் மீண்டு வந்து சிறப்பாக பந்து வீசினார். முதல் 3 ஓவரில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். அதை கலீல் அகமது செய்தார். இதனால் அவர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்தடுத்து போட்டிகளில் மோதுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால்தான் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #AsiaCup2018 #INDvHK #RohitSharma
Tags:    

Similar News