செய்திகள்

ராம் கோபால் வர்மா இயக்கிய என்.டி.ஆர். பற்றிய சினிமா படத்துக்கு அனுமதி மறுப்பு

Published On 2019-05-02 00:55 GMT   |   Update On 2019-05-02 00:55 GMT
ராம் கோபால் வர்மா இயக்கிய என்.டி.ஆர். பற்றிய சினிமா படம் திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி அனுமதி மறுத்துள்ளார். #ElectionCommission #RamGopalVarma #NTR
விஜயவாடா:

ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா, ‘லட்சுமி‘ஸ் என்.டி.ஆர்.‘ என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். இதில், தற்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆந்திராவில் தேர்தல் முடிந்த பிறகு படத்தை திரையிடலாம் என அனுமதி வழங்கியது. அதன்படி, மே 1-ந் தேதி (நேற்று) படத்தை வெளியிட ராம் கோபால் வர்மா முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

இந்நிலையில், அப்படத்தை திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி அனுமதி மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை களை சுட்டிக்காட்டி, இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.

“இதற்கு பின்னால் உள்ள சக்தி யார் என்று எங்களுக்கு தெரியும்“ என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

மேலும், இதுபற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு “சினிமா வெளியீடு குறித்து நான் எப்படி அக்கறை கொள்ள முடியும்?“ என்று அவர் கேள்வி எழுப்பினார்.  #ElectionCommission #RamGopalVarma #NTR 
Tags:    

Similar News