செய்திகள்

திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2018-12-29 11:23 GMT   |   Update On 2018-12-29 11:23 GMT
திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி எர்ரவாரி பாளையம் என்ற இடத்தில் ஒரு கும்பல் செம்மரம் வெட்டி கொண்டிருப்பதாக திருப்பதி மாவட்ட வன அலுவலர் நாகார்ஜூனுக்கு ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் ஏர்வாரி பாளையம் வனப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். வனத்துறையினர் வருவதை கண்ட கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

அவர்களில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் வேலூர் மாவட்டம் அனைக்கட்டை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 37), என்பது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர். அதேப்போல் பாஜிராப்பேட்டையில் வனத்துறை அதிகாரிகள் ஜோதி, வினோத்குமார், வசந்தன் குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை மட்டும் வனத்துறையினர் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் விட்டு சென்ற 33 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

பிடிப்பவரிடம் விசாரணை நடத்தியதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 30), என தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News