நல்லம்பள்ளி அருகே உபாதைகள் கழிக்க சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
பதிவு: மே 08, 2019 20:11
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரி பகுதியில் 22 வயது இளம்பெண். திருமணமான இவர் அந்த பகுதியில் உபாதைகள் கழிப்பதற்காக நேற்று சென்றார். அப்போது பாகல்பட்டியை சேர்ந்த பேப்பர் போடும் தமிழ்வீரன் (25) என்பவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பெண் சத்தம் போட்டததால் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் இன்று காலை பேப்பர் போடுவதற்காக தமிழ்வீரன் ஏலகிரி பகுதிக்கு சென்றார். அப்போது பொதுமக்கள் தமிழ்வீரனை கையும் களவுமாக பிடித்தனர்.
இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தமிழ்வீரனை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.