லைஃப்ஸ்டைல்

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு

Published On 2018-10-10 06:21 GMT   |   Update On 2018-10-10 06:21 GMT
இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் கிராமத்து பச்சை மொச்சை குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சை மொச்சை - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் விழுது - அரை கப்
மிளகாய் தூள் - இரண்டு டீ ஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன்



செய்முறை:

பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய், தனியா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம்.

குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.

குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த உடன் இறக்கிவிடவும்.

சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.

சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News