ஆன்மிகம்
கட்டமுத்துப்பாளையத்தில் 41 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.

41 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்

Published On 2019-05-25 04:21 GMT   |   Update On 2019-05-25 04:21 GMT
புதுப்பேட்டை அருகே 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுப்பேட்டை அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கடட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.20 லட்சம் செலவில் 41 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கணபதி பூஜையும், கஸ்தூரிரங்கன் பட்டாச்சாரியார் தலைமையில் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை பூர்ணாகுதி, 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் 8.40 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, 41 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சாமி சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன் தலைமையில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News