ஆன்மிகம்

அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில் - விருத்தாசலம்

Published On 2019-04-26 01:23 GMT   |   Update On 2019-04-26 01:23 GMT
தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் கொளஞ்சியப்பர் தலம் பிரசித்து பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக திகழ்கிறது.
சுவாமி : கொளஞ்சியப்பர்
தீர்த்தம் : மணிமுத்தாறு
தலவிருட்சம் : கொளஞ்சிமரம்

தலச்சிறப்பு : சங்க காலத்தில் நடுநாடு என போற்றப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மலர் தலை உலகின் கண் உள்ள எல்லா உயிர்களுக்கும் உய்யும் பொருட்டு கருணையே திருவுருவாக உடைய சிவபெருமான் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள நடுநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுள் சிறப்புற்று ஓங்கிய “திருமுதுகுன்றம்” எனும் விருத்தாசலத்திற்கு மேற்பால் ஒரு கல் தொலைவில் காவும் பூவும் நிறைந்த புள்ளினங்களும். வண்டினங்களும் இசைபாடும் இறைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது.”குரங்குலாவும் குன்றுரை மணவாள” என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்த பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.

தல வரலாறு : கொளஞ்சியப்பர் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது. திருக்கோவில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்துள்ளது. பசு மாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்ந்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொறிவதை மக்களால் காணப்பட்டு இது ஒரு புனித தெய்வம் எனக் கருதி வழிபாடு செய்துவரப்பட்டது.

சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்த போது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் “தம்பிரான்தோழன்” என்று சொல்லகூடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் இருந்து பதிகம்பாடி விருத்தாசலம் அடைந்த ஊர்.

சுவாமி பெயர்களைக் கேள்வியுற்று முதுமைதன்மை வாய்ந்த இவர்களால் பொன், பொருள் எனக் கருதி பாடாதொழிந்து சென்றபோது திருமுதுகுன்றத்து ஈசனாகிய பரம் பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் ”சுந்தரன் மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச் செய்” என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளாநல்லூர் எல்லைஎன்பது தெரியவந்தது.

அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் “முருகன் தான் பலிபீடஉருவில்” அமைந்துள்ளார்என உறுதி செய்யப்பட்டது கொளஞ்சி செடிகளின் ஊடேயும். பசுவின் கொளம்பின் மூலமாகவும் வெளிப்பட்ட அவருக்கு அருள்மிகு கொளஞ்சியப்பர் எனும் திருநாமத்தை சூட்டி வழிபட்டு வந்துள்ளார்கள். தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் இத்தலம் பிரசித்து பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக திகழ்கிறது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி :

அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில்,
மணவாளநல்லூர்-606001,
விருதாச்சலம்,
கடலூர் மாவட்டம்.

தொலைப்பேசிஎண்: 04143-230 232 
Tags:    

Similar News