ஆன்மிகம்

சிறப்பு வாய்ந்த பங்குனி மாத சிவராத்திரி விரதம்

Published On 2019-04-03 04:53 GMT   |   Update On 2019-04-03 04:53 GMT
இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த மாத சிவராத்திரி விரதம் தேன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் "சிவன்" சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார்.

அதன்பால் அன்னை பார்வதி தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அவ்வாறே நடைபெறும் என்று அருள்புரிந்தார்.

தேவியை போல நந்தி பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியை விரதத்தை மாதந்தோறும் தவறாமல் இதனை கடைப்பிடித்து வருவர். 
Tags:    

Similar News