ஆன்மிகம்

ரமலானின் சிறப்புகள்

Published On 2019-06-05 03:56 GMT   |   Update On 2019-06-05 03:56 GMT
நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,
அல்லாவின் மிகப்பெரும் கிருபையால் நபி (ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்கு கிடைத்த மிக மிக பெரும் பாக்கியம் புனித ரமலான் மாதம். நமது இம்மை மறுமையின் எல்லா வாழ்வு வகையிலும் சிறப்பு அடையவும் அல்லாவின் திருப்பொறுத்தத்தையும் பொக்கிஷத்தையும் பெறவும் அபரிதமான எல்லா சகல நன்மைகளை பெறுவதற்கும் துன்பத்திலிருந்து நீங்குவதற்கும் சகல காரணங்களுக்கும் விளங்கும் மாதம்.

ஒரு மனிதனின் இன்பத்திலும், துன்பத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்வது தான் உண்மையான மனிதநேயமும் பொருள் உதவி தேடுபவர்களுக்கு பொருள் உதவியும், உடல் உழைப்பு தேடுபவர்களுக்கு உதவியும், பசித்தவற்கு உணவும், தாகித்தவற்கு நீரும், ஆடை இல்லாதவற்கு ஆடையும், கண் பார்வையற்றவர்களுக்கு உதவியும், நடக்க முடியாத வர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர உதவியும், கல்வி உதவியும், ஏழை - எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் அல்லா உதவி செய்வதை விரும்புகிறான்.

நோன்பு என்பது பகல் முழுவதும் உணவு சாப்பிடாமலும் அல்லாவின் உதவி பெறுவது என்பது உள்பட ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம்,

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.

லியாகத் அலி
Tags:    

Similar News